அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை, முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்திற்கு வழங்கி, தங்கள் பக்கம் இழுக்க, பழனிசாமி தரப்பில் துாது விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழனிசாமியை பொதுச் செயலராக்கும் முயற்சியில், பெரும்பாலான நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.இரட்டை தலைமை தொடர வேண்டும் என்பதில், பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலில், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., வினருக்கு இரட்டை தலைமை கையெழுத்து இல்லாததால், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இந்நிலையில், பன்னீர்செல்வம் வலதுகரமாக செயல்படும் வைத்தியலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும். அவரை மட்டும் இழுத்து விட்டால் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தி விடலாம் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.
எனவே, வைத்தியலிங்கத்திற்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்குவதற்குரிய பேச்சு நடத்த, அவரிடம் பழனிசாமி ஆதரவாளர்கள் துாது சென்றுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment