Friday, June 24, 2022

இதுதான் உண்மை.

 ஒற்றை தலைமை என்ற பெயரில் அதிமுகவை மீண்டும் எழுச்சியுற செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது.

திடீரென ஒற்றை தலைமை கோஷம் முன்னெடுக்கப்பட்டது தான் பலருக்கும் ஆச்சரியம் தந்த விஷயம். இந்த முயற்சியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பன்னீர் செல்வம் அணியில் இருந்து பலரும் பழனிச்சாமி அணிக்கு செல்வதும் தொடர்கிறது. பழனிச்சாமி அதிமுக தலைவர் என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறார்.
சரி. அது வேறு கட்சியின் உள்விவகாரம் நமக்கு தேவையில்லை.
இந்த பக்கம் திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவு காரணமாக சில நாட்கள் ஓய்வு என்ற அறிவிப்பு.
எல்லாம் இயல்பாகவே நடக்கிறது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.
ஆனால் என் மனதில் தோன்றும் விஷயம் வேறு.
எனது கணக்கு சரியாக இருந்தால்
அதிமுகவில் நிகழும் இந்த மாற்றத்தின் சூத்திரதாரி விடியல் ஓனர் தான்.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கணக்குகளை நேர் செய்ய வேண்டிய கட்டாயம் விடியல் குரூப்பிற்கு இருக்கிறது.
காரணம்
மத்திய பாஜக தமிழகத்தில் உள்ள முப்பத்து ஒன்பது பாராளுமன்ற தொகுதிகளையும் எட்ட நின்று வேடிக்கை பார்க்க விரும்பவில்லை.
அதேபோல் விடியல் குரூப்பில் இருக்கும் தொழிலதிபர் & அரசியல்வாதிகள் பலரும் மத்திய அரசிடம் குலைந்து நெளிந்து ஆதாயம் பெற்று கொண்டே வெளிப்படையாக நேரெதிர் அரசியல் செய்து வருவதையும்
இந்து விரோத அரசியல், மொழி அரசியல் போன்றவற்றை மத்திய பாஜக ரசிக்கவில்லை.
நேரெதிர் கொள்கை உள்ள திமுகவை வீழ்த்தி, தமிழகத்தில் பாஜகவை வளர்த்தேயாக வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாமலையாரை களமிறக்கியது.
அண்ணாமலையால் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியால் கட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதோடு தினமும் மாற்று கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இப்படியே சென்றால் விரைவில் பல சிறிய கட்சிகள் முற்றிலும் பலமிழக்கும், அதிமுக சிதற ஆரம்பிக்கும்.
இது போன்ற நிலை ஏற்படுவதை விடியல் குரூப் விரும்பவில்லை.
காரணம் முதுமை.
குறுகிய காலத்தில் புதிய தலைமையை அரியணையேற்ற வேண்டிய கட்டாயம் விடியல் குரூப்பிற்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் மிகப்பெரிய அரசியல் மற்றும் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டி காக்கும் அளவிற்கு வாரிசின் புத்திசாலித்தனம் இல்லை என்பதையும் உணர்ந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் தங்களது நேரெதிர் கொள்கையுடைய பாஜகவின் வளர்ச்சி பலவிதங்களிலும் விடியல் குரூப்பை நிரந்தரமாக பாதிக்கும் என்ற அச்ச உணர்வு தோன்றியுள்ளது.
அதனால் அண்ணாமலையாரால் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு தடை போடப்பட வேண்டுமானால் அது அதிமுகவினால் மட்டுமே முடியும் என்று விடியல் குரூப் நம்புகிறது.
தமிழக அரசியல் அதிகாரம் திமுக அல்லது அதிமுக என்ற நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் ஒருவேளை மீண்டும் ஆட்சி இழந்தாலும்
அதிமுகவுடன் இருக்கும் திரைமறைவு புரிந்துணர்வு எதிர்காலத்தில் தங்களது அரசியல் மற்றும் வியாபார சாம்ராஜ்யத்தை பெரிதாக பாதிக்காது என்றும் நம்புகிறது.
இதன் காரணமாகவே ஒற்றை தலைமை கோஷத்தை மறைமுகமாக தூண்டி ஆதரவளித்து மீண்டும் அதிமுகவை நேரடி அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு நடந்த ரெய்டு நடவடிக்கைகளில் இனி எந்த முன்னேற்றமும் இருக்காது, பொறுத்திருந்து பாருங்கள்.
செங்கோட்டையன், ஆர் எஸ் பாரதி போன்றோர் திமுகவும், அதிமுகவும் பங்காளிகள் என்று அவ்வப்போது சொல்லி கொள்வதும் இதற்காக தான்.
விடியல் குரூப் தனது சாம்ராஜ்யத்தின் நலனை கருத்தில் கொண்டு காய்நகர்த்தி வருகிறது. ஆளும் தரப்பின் ஆதரவுடன் பழனிச்சாமி தரப்பு கட்சி தலைமையை கைப்பற்றும் முனைப்புடன் வேகம் காட்டுகிறது.
தமிழக அரசியலை அதிமுக அல்லது திமுக மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் முழு மனதோடு விரும்புகின்றனர்.
இவர்களின் அரசியல் சதுரங்கத்தில் நிச்சயமாக முடிவு இவர்கள் கையில் இல்லை.
ஆனால் காலத்தின் கணக்கை யாரும் கணிக்க முடியாது.
அண்ணாமலை அரியணை ஏறுவதையும் இவர்களால் தடுக்க முடியாது.
ஒற்றை தலைமை என்று முடிவாகிவிட்டால் என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...