நாமக்கல் மாவட்டத்தின் முதல் பெண் கண்டக்டருக்கு, பெண்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு போக்குவரத்துகழகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை இருந்தாலும், கண்டக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், லைசன்ஸ் எடுத்து பதிவு செய்திருந்தார்.பதிவு மூப்பு அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு முன், இளையராணிக்கு அரசு போக்குவரத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாதமாக, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
தற்போது, ராசிபுரம் டெப்போவில், ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டராக பணி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டர் என்பதால், இவர் பஸ்சில் ஏறும் பெண்கள், இளையராணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பெண்கள் இவரை பார்த்தவுடன், இவர் பஸ்சில் ஆர்வமாக ஏறிச்செல்கின்றனர். இளையராணிக்கு, குமார், 45, என்ற கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இளையராணி கூறுகையில், ''பெண்கள் முயற்சி செய்தால் எல்லா துறையிலும் வெற்றி பெறலாம். அப்பா கண்டக்டராக இருந்ததால், எனக்கும் கண்டக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
''அப்பா மறைவுக்கு பின், தம்பிக்கு வயது குறைவாக இருந்ததால், நான் கண்டக்டர் லைசன்ஸ் எடுத்து, வாரிசு வேலைக்கு பதிவு செய்திருந்தேன். ''தற்போது, நான் ஆசைப்பட்ட மாதிரி கண்டக்டர் ஆகியுள்ளேன். சிறப்பாக பணியாற்றி, அப்பாவை போல் நல்ல பெயர் எடுக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment