Wednesday, August 3, 2022

ஆடிப்பெருக்கு (3/8/2022) அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்க மறந்து விடாதீர்கள்! 16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள் என்ன?

 ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை குறிக்கிறது. முந்தைய காலங்களில் ஆடியில் காவிரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதனால் விவசாயம் செழித்து வந்தது. ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்பார்கள் எனவே விவசாயிகள் அனைவரும் இந்த மாதத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி விதைத்து விவசாயம் செய்வார்கள். ஆடிப்பெருக்கு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாயத்தின் மூலம் உயிர் வாழக்கூடிய ஒவ்வொருவருக்கும் ரொம்பவே முக்கியமான விழாவாக இருந்து வந்துள்ளது. குடும்பத்துடன் அனைவரும் நதிக்கரைகளுக்கு சென்று மங்களப் பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு விட்டு, இனிப்பு பொங்கல் செய்து, நதிக்கரையின் ஓரத்தில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து வெள்ளப் பெருக்கை பார்த்தபடி உணவு உண்டு மகிழ்வார்கள். இதனால் ஊரிலும், குடும்பத்திலும் மழைப்பொழிவு மற்றும் செல்வ செழிப்பு போன்றவற்றில் குறை ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த ஆடிப்பெருக்கு நாள் அன்று ஊரில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும், அந்த குடும்பத்திற்கு தேவையான செல்வங்களை சேர்க்கத் துவங்குவார்கள். நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை இந்நாளில் வாங்கினால் அது பன்மடங்காக பெருகி நம்மிடம் சேரும் என்பது நம்பிக்கை எனவே ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பதில் மாற்றமில்லை. ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. செல்வங்கள் மட்டும் மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய பொருட்கள் அல்ல! மகாலட்சுமிக்கு உகந்ததாக சாதாரண பொருட்களும் நிறையவே உண்டு. மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும். சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் வறுமையில் இருந்து, நல்ல நிலைக்கு மென்மேலும் வளர்ச்சி அடைய ஆடிப்பெருக்கு நாள் அன்று அம்மனை வீட்டில் வழிபடுங்கள். மேலும் இந்நாளில் சுமங்கலி பெண்கள் தாலியையும் மாற்றிக் கொள்வார்கள். சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக படைத்து அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடுங்கள் மேலும் உங்களால் முடிந்த பொருட்களை அன்றைய நாளில் வாங்கி வையுங்கள். அதில் முக்கியமாக கல் உப்பு வாங்குவது ரொம்பவே சிறப்பானது. கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் எனவே ஆடிப்பெருக்கு அன்று புதிதாக கல் உப்பு பாக்கெட் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும். அது போல இந்த ஒரு முக்கியமான பொருளையும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டும். குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும். குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள். அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும். எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்குவதாக ஆன்மீகம் கூறுகிறது. இது ஆன்மீகம் மட்டுமல்லாமல் அறிவியலும் ஒப்புக் கொள்கிறது எனவே குண்டு மஞ்சளை வாங்கி அன்றைய நாளில் அம்மனை வழிபட்டு பயனடையுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...