Wednesday, August 3, 2022

*"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது".

 "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே.*

*வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும் போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தைப் பாருங்கள்.*
*அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்.*
*காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது.*
*கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுதுபோக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.*
*"நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது.*
*நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது.*
*அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள்...*
*"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம்."*
*இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர்.*
*நோக்கியா ஒரு உலகப் புகழ் பெற்ற மரியாதைக்குரிய நிறுவனம். தொழில்ரீதியாக அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.*
*ஆனால் உலகம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருந்தது.*
*நோக்கியா எதிர்காலம் எப்படி மாறும் என்று கணிக்கத் தவறி விட்டது,*
*நோக்கியா எதிர்காலத்திற்கான திட்டங்கள் மற்றும் தங்களை மெருகேற்றிக் கொள்ளத் தவறி விட்டது.*
*உலகின் மிகப்பெரிய நிருவனமாகும் வாய்ப்பு,மிகப்பெரும் பொருள் ஈட்டக் கூடிய ஒரு வாய்பு தொழிலில் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பு போன்ற வற்றை இழந்தது,*
*நோக்கியாவின் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:-*
*நீங்கள் காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களையும், உங்கள் தொழிலையும் மெருகேற்றாவிட்டால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள்.*
*நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் எண்ணங்களும் மனநிலையும் கால ஓட்டத்திற்கு தகுந்தவாறு விரைவாக ஓட முடியாவிட்டால், உங்கள் நேரம் முடிந்துவிடும்.*
*ஒரு மனிதன் தன் தோல்வியின் தவறை திருத்திக்கொண்டு புதிது புதிதாக கற்றுக் கொண்டு களம் காணும் வரை வெற்றிகரமாக இருக்கிறான்.என்பதற்கு"ROYAL ENFIELD"சிறந்த உதாரணம்.*
*உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...