இதே மாநிலத்தில், 1,000 கோடி ரூபாய் சாரதா 'சிட்பண்ட்' ஊழல் விவகாரத்தில், ஏற்கனவே மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய மூத்த அமைச்சர்கள் பலருக்கு தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தற்போது அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் நியமனத்தில், பெருமளவு ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவரும், திரிணமுல் காங்., கட்சியின் பொதுச்செயலரும், மம்தாவின் மருமகனுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருக்கும், தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சட்டர்ஜியின், 'அபிமான' நடிகையும், கூட்டாளியுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து, பல கோடி ரூபாய்க்கும் மேலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பண மோசடியில் தொடர்புடைய, வேறு பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊழலில் திராவிட கட்சிகளை எல்லாம் மிஞ்சி விட்டது, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ். தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்பது நன்றாகத் தெரிந்தும், மாறி மாறி அந்த கட்சிகளுக்கே ஓட்டளிக்கின்றனர் தமிழக வாக்காளர்கள்.
அதுபோல, ஊழல்வாதிகளின் மகாராணியான மம்தாவின் கட்சிக்கே, மேற்கு வங்க மக்களும் ஓட்டளிக்கின்றனர். ஊழலில் திளைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் என்ற, ரிஷிமூலத்தில் கிளைத்த கட்சி தானே திரிணமுல் காங்கிரஸ். நல்லவேளை ஜெயலலிதாவின் தோழி சசிகலா போல, மம்தாவிற்கு தோழி யாரும் இல்லை. அதற்கு பதிலாக அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நிழலாட்சியில் தான், இந்த ஊழல்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையின் அதிரடிகள் தொடர்ந்தால், தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து, இருவரும் சிறையில் கம்பி எண்ணியது போல, மம்தாவும், அவரின் மருமகனும், சிறைவாசம் அனுபவிக்கும் நாள் வெகு துாரத்தில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.

No comments:
Post a Comment