மத்திய பிரதேசத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து புகாரில் ஆர்.டி.ஓ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியதில், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மினி பார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ம.பி. மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் பவுல், ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலரான இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சந்தோஷ் பவுல் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதில் லஞ்ச ஆர்.டி.ஓ., பங்களா சுமார் 10 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளதும் , பங்களாவிற்குள் 5 நட்சத்திர ஒட்டல் போன்று ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மினி பார் ஆகியவற்றுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை கண்டறிந்தனர். தவிர ரூ. 16 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகைகள், மற்றும் வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஆர்.டி.ஓ., சந்தோஷ் பவுலின் மனைவி ரேகா பவுலும் அரசு உயரதிகாரி எனவும், இருவரும் கடந்த சில ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 650 மடங்கு சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தோஷ் பவுல் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment