Thursday, August 18, 2022

நல்ல மனம் வேண்டும்.

 பெண்ணுக்குத் திருமணம் அமையவில்லை என்றால் பெற்றோருக்குக் கவலைதானே. இது எல்லா பெண்களைப் பெற்றோருக்கும் பொருந்தும். அன்று லட்சுமியைப் பெண்பார்க்க வருகிறார்கள். லட்சுமி பெயருக்கேற்றார்போல் லட்சுமிகரமாயிருப்பாள். ஒரே பெண். அப்பா சமீபத்தில் இறந்து விட்டார். இரண்டு அண்ணன்கள்.

தங்கையைத் தங்கத் தொட்டிலில் தாலாட்டினர். தாய்க்கு மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லோரும் ஒரே வீட்டில் சேர்ந்தே இருந்தனர். அப்பாவின் அரசு காண்ட்ராக்டர் தொழிலைப் பிள்ளைகளும் தொடர்ந்தனர். அப்பா கொடுத்த பயிற்சி பிள்ளைகளையும் வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றது. வசதிக்குக் குறைவேயில்லை.
இந்நிலையில்தான் தங்கைக்குத் திருமணத்திற்கு பார்க்கத் தொடங்கினர். இது வரை 5 பேர் லட்சுமியைப் பெண் பார்த்துச் சென்றனர். அவர்களில் ஒருவரிடமிருந்தும் சரியான பதில் வரவில்லை. பெண்ணைப் பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அவர்கள்," சரி அம்மாவைக் கூப்பிடுங்க. மற்ற விஷயங்களைப் பேசலாம் என் பார்கள். அதுவரை தலைகாட்டாமலிருந்த அம்மா வெளியே வருவாள். வந்தவர்கள் பார்ப்பார்கள்.
"மற்ற விஷயங்களை நாங்க போய் தகவல் அனுப்பறோம்" னு சொல்வாங்க. போனவர்கள் போனவர்கள் தான் பதிலேதும் வராது. அம்மா வைப்பார்க்கும் வரை நன்றாகப் பேசியவர்கள், அம்மாவைப் பார்த்ததும் முகம் சுருங்கிப் போகக் காரணமென்ன? அம்மாவின் உடல் முழுவதும் .'லூகோடர்மா' எனப்படும் தோல் நோய். முகம் முழுவதும் வெள்ளைத் திட்டுகள். 'லூகோடர்மா' ஒரு வியாதியல்ல. ஏன், எப்படி வருகிறது? யாருக்கும் தெரியாது. அது யாருக்கும் பரவாது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் திருமணம் என்று வரும் போது மகளை பெருந்தன்மையோடு மணந்து கொள்ள யாருக்கும் துணிவில்லை. நாமென்ன பெரிய தியாக பரம்பரையில் வந்தவர்களா எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள.
இன்றும் வரும் மாப்பிள்ளையை எதிர் நோக்கிக் காத்திருந்தனர். அம்மாவிடம் சொல்லிவிட்டனர். "அவங்க வரும்போது நீங்க ஔியவேண்டிய அவசியமில்லை. சாதாரணமா ஹால்ல வந்து நில்லுங்க. சகஜமா பேசிட்டிருங்க. நடக்கறது நடக்கட்டும். எல்லாம் அவன் இஷ்டம்" கடவுள் மேல் பாரத்தைப் போட்டனர். மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பெண்ணைப் பார்த்தனர். அம்மாவைப் பார்த்தனர் கூடிப்பேசினர். இனி அவ்வளவு தான்.... போய் தகவல் சொல்ரோம் அப்படீன்னு எழுந்து போயிடுவாங்க. நினைத்தது வேறு நடந்தது வேறு.
மாப்பிள்ளையின் தந்தை லட்சுமியின் அண்ணன்களிடம் "பெண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மத்தவிஷயங்கள்னு ஏதும் பேசறதுக்கில்லே. நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம். நேரா கல்யாணத்துக்கு நாள் பாருங்க" ன்னு சொல்லிப் புறப்பட்டாங்க. லட்சுமி கல்யாணம் முடிவானதில் அவ அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
மாப்பிள்ளை வீட்டார் ஒவ்வொருவராகக் கல்யாணப் பத்திரிகை வைத்தனர்.
பத்திரிகையை வாங்கிப் பார்த்த ஒருவர் "இந்தப் பெண்ணா?.... அவ அம்மாவைப் பாத்தீங்களா?"
"ஆமாம். பார்த்தோமே... அதுக்கென்ன"
"இல்லே. பெண்ணோட அம்மாவுக்கு பெருவியாதியிருக்கே. தெரியுமா?"
" பெரு வியாதியா? அப்படி ஒன்னுமில்லையே. லூகோடர்மா. தோல்ல வர ஒரு மாறுதல். அது நோயல்ல. பரவாது. அவங்க எல்லாரும் குணத்துல தங்கம். அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ண என் பையன் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்று சொல்லி கிளம்பினார் மாப்பிள்ளையின் தந்தை. லட்சுமியின்திருமணம் சீரும் சிறப்புமாகா நடந்தது. ஒரே ஆண்டில் பெண் கருவுற்றாள். வளைகாப்பு முடிந்து லட்சுமியை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்தனர். அம்மாவுக்கு ஒரே மகிழ்ச்சி. பிரசவம் நல்லபடியாக நடைபெற வேண்டாத தெய்வமில்லை. பிரசவநாள் வந்தது. மருத்துவமனைக்கு மாப்பிள்ளையின் பெற்றோரும் வந்திருந்தனர். எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க ஒரு நர்ஸ் வந்து " ஆம்பிளைப்பிள்ளை" என்று சொல்லிவிட்டுப் போனாள். எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.
மாப்பிள்ளை தயாராக வாங்கிவந்திருந்த ஸ்வீட்டை எல்லோருக்கும் கொடுத்தான். சிறிது நேரத்தில் நர்ஸ் பிள்ளையுடன் வந்தாள். "லட்சுமியோட அம்மா யாருங்க..... பிள்ளைய கையில வாங்குங்க" ன்னா. அம்மா குழந்தையை வாங்கத் மிகவும் தயங்கினாள். மாப்பிள்ளையின் அம்மாவிடம் "நீங்க வாங்கிக்குங்க" என்றாள். மாப்பிள்ளையின் அம்மா "நீங்க வாங்கறது தாங்க முறை. சும்மா வாங்குங்க. ஒன்னும் ஆகாது" என்றாள். மிிகுந்த தயக்கத்துடன் லட்சுமியின் தாயார் குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்தாள். மார்போடணைத்தாள். ஆஹா... மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
Move your mouse to view the photo in 3D

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...