Monday, August 15, 2022

அன்பாக நாலு வார்த்தை பேசினாலே நமக்கு தயங்காமல் உதவ முன்வருவார்கள்.

 மூன்று நாட்களுக்கு முன் அருகில் உள்ள முடி திருத்தகத்திற்குச் சென்றிருந்தேன். நான் சென்ற சமயம் கடைக்காரர் அங்கில்லை. நான் சிறிது நேரம் காத்திருந்ததும் அவர் வந்து விட்டார். வந்ததும் "சாரி சார், டீ சாப்பிட போயிருந்தேன் " என்றார்.. பரவியில்லைங்கபா என்று கூறிவிட்டு நாற்காலியில் ஏறி அமர்ந்தேன். சிறிது நேரத்தில் என்னோடு பணிபுரியும் ஒரு நண்பர் வந்து "ஏங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாவுக்கு முடி வெட்டிவிட முடியுமா என்கிறார். இவரோ எவ்வளவு தூரம் என்றதும் வந்தவர் நாலு கிமீ இருக்கும் என்றார். சாரிங்க சார் அவ்வளவு தூரம் வரமுடியாது எனக் கனிவாக மறுத்தார்.

அவர் போனதும் முடிதிருத்துபவர் " வந்தவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் வாடிக்கையாக முடி வெட்டுபவரிடம் கேட்டாலே அவர் வருவார். " என்றார். அப்படியா என நான் கேட்டதுமே அவர் தொடர்ந்து "நான் என் வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்று இங்கு வர முடியாத பெரியவர்களுக்கு வீட்டிற்கே சென்று முடி வெட்டிவிட்டு கடையில் வாங்கும் கட்டணத்தை வாங்குவேன்" என்றார். நானோ ஏங்க டாக்டரை வீட்டுக்கு அழைத்தால் மூனு மடங்கு ஃபீஸ் வாங்கும் போது நீங்களும் சேர்த்து வாங்கலாமே என்றேன். அவர் சிரித்துக்கொண்டே முடியாத நிலைமையிலே நம்மை அழைக்கிறாங்க என் தந்தைக்கு செய்வதாக நினைத்து ஒரு உதவியா நினைத்துச் செய்றேன் சார் என்றதும் இப்படி ஒரு மனிதரா என வியப்பாக இருந்தது.
நம்மில் பலர் நாம்தான் பெரிய ஆள்.. இவர்கள் எல்லாம் காசு கொடுத்தால் வேலை செய்வார்கள் என்ற மமதையில் உள்ளனர்.இவர்களிடம் பேசினால் நம் கெத்து குறைந்துவிடும் என நினைக்கிறார்கள். நாம் வாடிக்கையாக உள்ளவர்களிடம் அன்பாக நாலு வார்த்தை பேசினாலே நமக்கு தயங்காமல் உதவ முன்வருவார்கள் என்பதை நாம் அறிவதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...