Monday, August 1, 2022

சப்பாத்தி மாவு பிசைய கஷ்டமாக இருக்கிறதா? கஷ்டப்பட்டு பிசைந்தாலும் சப்பாத்தி சாஃப்டாக வரவில்லையா? அப்படின்னா இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க நீங்களும் சுடலாம் மெத்தென்ற சப்பாத்தி!

 சப்பாத்தி என்பது அனைவருக்கும் மிகுந்த விருப்பமான ஒரு கோதுமை உணவு வகை ஆகும். எல்லா வயதினருக்கும் சப்பாத்தி என்பது இஷ்டமான ரெசிபி ஆகும். இதற்கு தொட்டுக் கொள்ள சரியான சைட்டிஸ் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். இப்படி அனைவரின் மனம் கவர்ந்த சப்பாத்தி சாஃப்டாக நீண்ட நேரம் வறண்டு போகாமல் இருக்க எப்படி மாவு பிசைய வேண்டும்? என்கிற ரகசிய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். எல்லோருக்கும் விருப்பமான இந்த கோதுமை மாவு சப்பாத்தி உடல் எடை குறைப்பதிலும் முக்கிய வங்கு வகிக்கிறது. இரவு நேரங்களில் பொதுவாக அரிசி உணவை தவிர்த்து கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தியை குறிப்பிட்ட அளவில் உட்கொண்டால், கார்போஹைட்ரேட் இல்லாததால் கணிசமாக உடல் எடை குறையும் என்பதால் சப்பாத்திக்கு பெரும்பாலானோர் மாறி விட்டனர். வடநாடுகளில் முக்கிய உணவாக இடம் பெறும் இந்த சப்பாத்தி ரொம்பவும் சாஃப்டாக செய்யப்படுவது உண்டு. ஆனால் தென் பகுதிகளில் அது எல்லோருக்கும் அவ்வளவு சுலபமாக பிசைய வருவது இல்லை. என்னதான் கூடுதல் பொருட்களை சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்தாலும் உங்களுக்கு சாஃப்டான சப்பாத்தி வரவில்லை என்றால், இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க. முதலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கோதுமை மாவு மிருதுவாக வருவதற்கு இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் மட்டுமே சேர்ப்பதால் கோதுமை மாவு இனிப்பு சுவையை கொடுப்பதில்லை எனவே தைரியமாக சேர்த்து பிசையுங்கள். ஓரளவுக்கு மாவு திரண்டு வரும் வரை நீங்கள் கைகளை வைக்காமல் கரண்டியை பயன்படுத்தி பிசைய வேண்டும். ஒரு தாளிக்கும் கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் இரண்டையும் கலந்து கொதிக்க விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை ஆற விட்டு விடுங்கள். அதன் பிறகு மாவுடன் சேர்த்து கரண்டியை கொண்டு மீண்டும் மாவை கலந்து கொடுங்கள். எண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதால் மாவு ரொம்பவும் மிருதுவாக இருக்கும். எவ்வளவு நேரம் ஆனாலும் வறட்டி போல மாறாமல் அப்படியே மெத்தென்ற தன்மையில் இருக்கும். கரண்டியை கொண்டு கலந்து விடும்பொழுது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான தண்ணீரை சேர்ந்து கலக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கும் பொழுது மாவு நன்கு வெந்து வரும். அதன் பிறகு நீங்கள் பிசையும் போது ரொம்பவும் சாஃப்டாக வருவதற்கு ஏதுவாக இருக்கும். கரண்டியை கொண்டு ஓரளவுக்கு மாவு பிசைந்தும், பிறகு கரண்டியை தூக்கி போட்டுவிட்டு கைகளால் கலந்து கொடுங்கள். அழுத்தம் கொடுக்காமல் மாவை மிருதுவான முறையில் சுடு தண்ணீர் ஊற்றி ரொம்பவும் பிசுபிசு என்று இல்லாமல், ரொம்பவும் வறண்டு போகவும் இல்லாமல் மிதமான பதத்தில் பிசைய வேண்டும். பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடியில் மேட் அல்லது ஏதாவது ஒரு துணியை விரித்துக் கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தில் இந்த பிசைந்த மாவை போட்டு நன்கு தட்டுங்கள். மேலிருந்து கீழே வேகமாக தூக்கி போட்டு எடுங்கள். இது போல செய்வதால் மாவு இன்னும் மிருதுபடும். தேவை என்றால் நீங்கள் மாவை சிறிதளவு தூவி இது போல செய்யலாம். பிறகு ஒரு மணி நேரம் ஈரத்துணியை போட்டு மூடி ஊற விட்டுவிட்டு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி சுட்டு பாருங்கள் எப்பேர்பட்டவர்களுக்கும் இந்த முறை சாஃப்ட் சாஃப்ட் ச்சப்பி சப்பாத்தி நிச்சயம் வரும் ட்ரை பண்ணி பாருங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...