Monday, August 1, 2022

ஒருவருகொருவர் உதவிக்கரம் நீட்டுவது நின்று விடும்.

 ஒரு முறை ஒரு குதிரை வீரன் தனது குதிரையில் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்தான். அந்தரத்தில் தாகத்தால் தவித்த ஒருவனை கண்டு குதிரை நிறுத்தினான். தண்ணீர் கொடுத்ததும் குடித்துவிட்டு அவன் சற்று அமைதியானான்.

'நீ ஏதோ கேட்க வெட்கப்படுகிறாய், நான் வேண்டுமானால் உன்னை நீ போக வேண்டிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கட்டுமா? என்றான்.
'உங்கள் தாராள மனதுக்கு மிக்க நன்றி, நானும் உதவி கேட்கலாம், என்றுதான் இருந்தேன் ஆனால் வெட்கமாக இருந்தது' என்றான்.
குதிரை வீரன் சிரித்தவாறே, ஏறுங்கள்! என்றான். அவன் ஏற முயன்ற போது அவனால் ஏற முடியவில்லை, நான் ஒரு உழவன், குதிரை மீது ஏறி எனக்கு பழக்கம் இல்லை என்றான்.
குதிரை வீரன் கீழே இறங்கி அவன் ஏறி அமர உதவி புரிந்தான். குதிரை மீது அவன் ஏறியவுடன், தேர்ச்சி பெற்ற குதிரை வீரனாக குதிரை மீது தட்டி வேகமாக அவன் பாட்டில் நகரத் தொடங்கினான்.
தலையில் கையை வைத்த குதிரை வீரன், தான் ஒரு பெரும் கொள்ளைக்காரனிடம்
சிக்கியது தெரியவந்தது.
'தயவு செய்து நான் சொல்வதை ஒரு வினாடி கேட்டுவிட்டு செல்! என்று சப்தமிட்டான்.
'இவனது அழைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது என்று திருடன் திரும்பிப் பார்த்து, என்ன விசயம் சொல்! என்றான்.
தயவு செய்து இந்த விசயத்தை ஊரில் யாரிமும் சொல்லிவிடாதே! என்று கெஞ்சினான்.
'ஏன் குதிரை வீரன் என்ற உன் நற்பெயர் கெட்டுவிடும் என்று பயப்படுகிறாயா? என்று கேட்டான்.
'இல்லை, மக்களிடையே ஒருவருகொருவர் உதவிக்கரம் நீட்டுவது நின்று விடும் என்று அஞ்சுகிறேன்' என்றான்.
கன்னத்தில் ஒரு அறை விழுந்தவன் போல், திருடன் குதிரையை விட்டும் இறங்கி அவன் பாட்டில் நடயை கட்டினான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...