Monday, August 1, 2022

திமுகவவை . #கடுமையாக_விமர்சித்த .. #நிர்மலா_சீதாராமன் .

 2021, நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ. 5, டீசல் மீதான வரி ரூ. 10 என்ற வகையில் மோதி குறைத்தார். ...

அதேபோல, 2022, மே மாதம் மத்திய அரசு திரும்பவும் பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்ற வகையிலும் விலை குறைக்கப்பட்டது.
எல்பிஜி உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 மானியம் தருவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு திமுக அதன் தேர்தல் அறிக்கையில் தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சிக்கு வந்தால்....
பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4 குறைப்போம் என்றனர்.
அதைத் தவிர, மாநில அரசு எல்பிஜி மானியம் ரூ. 100 தருவோம் என்று கூறியது,"
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை ஒருமுறை அல்ல இரண்டு முறை குறைத்து விட்டது.
ஆனால், உங்களுடைய அரசாங்கம் (திமுக அரசு) மாநிலத்தில் ஏன் விலையைக் குறைக்கவில்லை
செய்வது நீங்கள், பாவம் எங்களுடையதா?
இந்த கேள்வியை மாநிலத்தில் உள்ள திமுக அமைச்சரிடம் (பிடிஆர் தியாகராஜன்) செய்தியாளர்கள் கேட்டபோது
"நாங்கள் தேதியையா சொன்னோம். சொன்னோம் அவ்வளவுதான்," என்று பதிலளித்தார்.
ஆனால் எதிர்கட்சியினர் என்னைப் பார்த்து அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக கூறுகிறார்கள்.
மத்திய அரசு விலையை குறைக்கும். ஆனால், நாங்கள் குறைக்க மாட்டோம் என்று கூறி முதலைக்கண்ணீர் வடிக்கும் கதை இது.
மேலும், பேரவையில் அவர்கள் பேசும்போது டீசல் விலையை குறைக்கலாம்தான். ஆனால், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்ற தரவு எங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறினர்.
"அதிக விலை நிர்ணயித்தது தமிழ்நாடுதான்"
பால் விலையை அதிகரித்து விட்டீர்கள் என்று திமுக தலைவர்கள் கூறினர்.
ஆனால், நாங்கள் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம்.
பிராண்ட்டட் பால் வகை மீதான வரியைத்தான் கூட்டினோமே தவிர சாதாரண கறந்த பாலுக்கோ லூஸ் ஆக வாங்கும் பாலுக்கோ எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலில் உங்களுடைய அமைச்சரும்தான் இருக்கிறார்.
அதில்தான் பிராண்ட்டட் ஐட்டங்கள் மீது மட்டும்தான் வரி போட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
அதை உயர்த்தியது நானோ மோதியோ கிடையாது.
ஒரு கிலோ தயிர் வாங்கினால் அதற்கு முன்பிருந்த பழைய விலை ரூ. 100. அதற்கு மேல் வரி போட்ட பிறகு அது ரூ. 105 ஆகும்.
ஆனால், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்? ரூ. 120க்கு விற்கிறீர்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் ஐந்து சதவீதம்தான் வரி விதிக்கச்சொல்லியது.
ஆனால், நீங்கள் போட்ட விலை என்ன?
இனிப்பாக இருக்கக் கூடிய மோர் அல்லது லஸ்ஸி மீது ஐந்து சதவீத வரி போட்ட பிறகு அது ரூ. 28.35 காசுகளாக இருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் ரூ. 30க்கு விற்கிறீர்கள். ஜிஎஸ்டி மீது பழி போட்டு விட்டு நீங்கள் மக்களிடம் அதிக விலைக்கு விற்கிறீர்கள், பாரத்தை சுமத்துகிறீர்கள்.
அதுபோலவே, ரூ. 10க்கு விற்க வேண்டிய மோர் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டால் அது ரூ. 10.50 காசுகளாக இருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் ரூ. 12க்கு விற்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும்?
விலையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டியை காரணம் காட்டும் நீங்கள்,
பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விதிக்கிறீர்கள்.
ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. அதில் அங்கமாக இருப்பது உங்களுடைய அமைச்சரும்தான்.
அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
அதில் ஏழைகளை பாதிக்கக் கூடிய வகையில் எதுவும் செய்யவில்லை
மாறாக நீங்கள்தான் ஜிஎஸ்டி நிர்ணயித்த வரியை விட அதிக வரியை போட்டிருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...