சென்னை தேனாம்பேட்டையில், அறிவாலயத்துக்கு பக்கத்தில் இருக்கும் குடியிருப்பில் வசீத்த போது, அதிகாலையில் நான் பால் வாங்க கிளம்பும் நேரமும், கருணாநிதி அறிவாலயத்துக்குள் நடை பயில வரும் நேரமும் சரியாக இருக்கும்.
கருணாநிதியின் கார் அறிவாலயத்திற்குள் வந்து நின்றதும், அவரின் எடுபிடிகளில் ஒருவர், அவரின் கால்களில் சாக்சையும், ஷூவையும் மாட்டி முடிச்சு போடுவார். போட்டு முடித்ததும், அந்த நபரின் துணையோடு காரிலிருந்து இறங்கி, அறிவாலயத்தை சுற்ற ஆரம்பிப்பார் கருணாநிதி.தி.மு.க.,வினர் உறங்கும் நேரம் உட்பட, 24 மணி நேரமும், ஹிந்து மதம் மற்றும் அதன் தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், கோவில்கள், கடவுள் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கேலியும், கிண்டலும் செய்து விமர்சித்தாலும், தங்களுக்கு தேவை ஏற்படும் போது, அவற்றை தலையில் துாக்கி வைத்து கொண்டாட, சிறிதும் வெட்கப்பட மாட்டார்கள்; தயங்க மாட்டார்கள்.இப்போது, கருணாநிதி எழுத பயன்படுத்திய பேனாவின் மாதிரியை, 134 உயர சிலையாக வடிவமைத்து மெரினா அருகே கடலில் நிறுத்தப் போகின்றனராம். நிறுத்தட்டும்... நிறுத்தட்டும்... நாட்டுக்கு மிக அவசியம்! ராமர் வனவாசம் சென்ற போது, அவரின் பாதுகைகளை அதாவது காலணிகளை, தம்பி பரதன் வாங்கி வந்து, அரியாசனத்தில் வைத்து, அந்த பாதுகைகளின் சாட்சியாக ஆட்சி நடத்தினார். ராமாயணத்தில், 'பாதுகா பட்டாபிஷேகம்' என்று தனியாகவே, இதற்கு ஒரு பகுதி உண்டு.
இன்று முதல்வராக உள்ள கருணாநிதியின் மகன் ஸ்டாலின், மூச்சுக்கு முன்னுாறு முறை, 'இது கருணாநிதியின் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி' என, கதை யளந்து கொண்டிருக்கிறார்.அந்த கதையில் ஒரு அங்கமாக, அறிவாலயத்தில் கருணாநிதி நடைபயிற்சி மேற்கொண்ட போது பயன்படுத்திய ஷூக்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஆசனத்தில் வைத்து, வணங்கி, அதன் மேற்பார்வையில் ஆளத் துவங்கினால், இது கருணாநிதியின் ஆட்சி தான் என, மக்களுக்கு தெள்ளத்
தெளிவாகத் தெரியும்!உலக நாடுகள் எதிலும், இப்படிப்பட்ட ஒரு புரட்சி ஆட்சி இதுவரை நடைபெற்றதில்லை. பாதுகையை முதல்வர் ஆசனத்தில் வைத்து, ஸ்டாலின் ஆட்சி செய்தால், அது நிச்சயமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரியை, சிலையாக வடித்து நிறுத்தும் போது, அவர் உபயோகித்த பாதுகை களை, முதல்வர் ஆசனத்தில் அமர்த்தி, அரசு நிர்வாகத்தை நடத்துவது ஒன்றும் தவறில்லை அல்லவா?
No comments:
Post a Comment