வீட்டில் கடந்த ஆறு
மாதமாக மகனுக்கும்,மருமகளுக்கும்
வாக்குவாதம், வேறு என்ன ஈகோ
விஷயங்களுக்கு சண்டை போட்டு
எல்லோருடைய வாழ்க்கையும் ரணகணமாக்கி விட்டு இருக்கிறார்கள்
இதில் சம்பந்தபட பயந்து
மாமனார் பேத்தியை கூட்டிண்டு
வெளியில் போயிடுவார், பேத்தி
ரம்யாவும் தாத்தா கூட ஒட்டி கொண்டு இருந்தாள், ஐந்து வயதான
ரம்யா தாத்தாவின் ,கூடவே எப்பொழுதும் இருந்தாள்,
டைவோர்ஸ் ,வரை ,போய் விட்டது
கோர்ட்டில் தாய்,தந்தை இருவரும்
குழந்தையின் கஸ்டடிக்காக கேஸ்
போட்டார்கள், இருவரும் விட்டு
கொடுக்க தயாராக இல்லை,
இன்று ,தீர்ப்பு, ஜட்ஜ் ரம்யாவிடம்
நீ யார் கூட இருக்கணும் என்று
ஆசைப்படறே? தாயா,தந்தையா?
ரம்யா இருவர் முகத்தையும்
பார்க்கிறாள், தூரத்தில் கண்ணீருடன்
நிற்கும் தாத்தாவை பார்த்தாள்,
இருவரும் பிரிவதால் தாத்தா
முதியோர் இல்லத்துக்கு போகப்
போறார், இந்த பேத்திக்காக இத்தனை
நாள் அந்த நரகத்தில் இருந்தார்,
இனி பேத்தி இல்லை என்றால்
அவருக்கு என்ன வேலை?
ரம்யா ஓடிப் போய் தன் தாத்தாவை கூட்டி வருகிறாள்,
"எனக்கு இவா இரண்டு பேரும்
வேண்டாம், நான் தாத்தாகூட முதியோர் இல்லத்துக்கு போகப்
போறேன், நான் அவர் கூட நிம்மதியாக படிப்பேன்"
ஜட்ஜ் இதை கேட்டவுடன் ஸ்தம்பித்து போய் விட்டார்,,
அவர் ,நினைத்தார்" ரம்யா
இருவரும் வேண்டும் என்று கேட்பாள்
என்று நினைத்தார், பெற்றோர் இருவரும் அவமானத்தால் தலை
குனிந்து நின்றனர், அவர்களுடைய
ஈகோ தாத்தாவின் அன்பு முன்பு
சுக்கு நூறாகி விட்டது,,
ஜட்ஜ் ஒரு வருடம் தாத்தா கூட
பேத்தி இருக்கலாம், அவர்கள் இருக்கும் வீட்டை தாத்தாக்கு கொடுக்கணும், தாத்தாவும்,பேத்தியும்
இஷ்டப்பட்டால் பெற்றோர் அங்கு
தங்கலாம், இல்லாட்டா வேறு வீடு
போக வேண்டியது,
தாத்தாவும் பேத்தியும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தனர்,
பெற்றோர் என்ன செய்வது என்று
தெரியாமல் முழித்துக் கொண்டு
நின்றனர்,
இன்று உலக ,முதியோர் தினத்தன்று ஒரு முதியவர் பெற்ற
வெற்றி எல்லா முதியவருக்கும்
சேர்த்துத் தான், பெருமை பட வேண்டிய தினம்
No comments:
Post a Comment