ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, 2017ல் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பதவி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய ஆணையம், ஏப்., 26ல் விசாரணையை நிறைவு செய்தது. மொத்தம், 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்த நிலையில், அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வந்தது. ஆணையம் விசாரணையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பங்கேற்றனர். அவர்கள் அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
ஆணையத்தின் பதவி காலத்தை, ஆக., 24 வரை அரசு நீட்டித்தது. கடந்த வாரம் எயம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதல்வரை சந்தித்து, இறுதி அறிக்கை அளிக்க உள்ளதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment