இந்தியா - மாலத்தீவு இடையே, பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா - மாலத்தீவு இடையே, பல்வேறு முக்கிய துறைகளின் ஒத்துழைப்பை விரிவு படுத்துவது தொடர்பாகஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை:மாலத்தீவில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த, இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
கிரேட்டர் மாலே பகுதியில் 4,000 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்தை இன்று ஆய்வு செய்தோம். மேலும் கூடுதலாக 2,000 குடியிருப்புகளுக்கு நிதி உதவி அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். மாலத்தீவின் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க, கூடுதலாக 800 கோடி ரூபாய் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு கடந்த குற்றங்கள், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை இந்திய பெருங்கடல் பகுதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியா - மாலத்தீவு நல்லுறவு, பிராந்தியத்தின் முழுமையான அமைதிக்கு வழிவகுக்கும்.மாலத்தீவுக்கு எந்தவிதமான நெருக்கடி நிலை ஏற்பட்டாலும், முதல் உதவிக்கரம் இந்தியாவிடம் இருந்தே நீளூம்.
இரு நாடுகளுக்கு இடையே திறன் வளர்ப்பில் ஒத்துழைப்பு, இணையவெளி பாதுகாப்பு, வீட்டு வசதி, பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு வளர்ச்சி உட்பட, ஆறு முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சாலிஹ் கூறுகையில், ''இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக மாலத்தீவு இருக்கும். இந்தியாவுடனான உறவுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். ''பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நிலையான உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தியது,'' என்றார்.
No comments:
Post a Comment