Monday, August 15, 2022

திரைச்சீலைகள், கால் மிதியடிகளை கை வைக்காமல் ரொம்ப சுலபமாக புதிது போல துவைத்து எடுக்க இதை விட சிறந்த ஐடியா இருக்க முடியாது!

 நாம் அனுதினமும் பயன்படுத்தும் கால் மிதியடிகளை ஒருபோதும் கண்டு கொள்வது இல்லை. எல்லா விஷயங்களிலும் சுத்தத்தை பேணிப் பாதுகாக்கும் பலரும், இந்த கால் மிதியடிகளின் மீது கவனம் செலுத்தாதது ஏனோ? பாதங்கள் வழியாகத் தான் நம் வீட்டிற்குள் கிருமிகள் நுழைகின்றன. இத்தகைய கிருமிகளை முதலில் தாங்கும் இந்த மிதி அடிகளை சிரமம் இல்லாமல், கை வைக்காமல் எப்படி சுத்தம் செய்வது? அதுவும் ஆரோக்கியமான முறையில் கிருமிகள் அற்ற மிதியடிகளை எப்படி பெறுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். குறிப்பாக திரைசீலைகள், மிதியடிகள் போன்றவற்றையும் வாரம் ஒரு முறையாவது துவைத்து காய வைத்து விடுவார்கள். ஆனால் இது வெகு குறைவானவர்கள் மட்டுமே செய்யும் பழக்க வழக்கங்களாக உள்ளன. பெரும்பாலும் இந்த மிதி அடிகளை துவைப்பது, திரைசீலைகளை துவைப்பது போன்றவற்றை செய்வதில்லை. திரை சீலைகள் அதிக நாட்கள் துவைக்காமல் விட்டுவிட்டால் அதிலிருந்து நிறைய பூச்சிகள், கொசுக்கள் தொந்தரவுகள் அதிகரிக்க துவங்கும். இந்த கொசுக்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் சுவைக்காத திரைசீலைகள் மீது அதிகம் உட்கார விருப்பம் கொள்ளும். நீங்கள் திரை சீலைகளை அசைத்து பாருங்கள். கொசுக்கள் பறப்பதை பார்க்கலாம். அதே போல மிதியடிகளையும் அவ்வபோது துவைத்து எடுக்காவிட்டால், அதிலிருந்து நோய்க் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகளை கொடுத்து விடுகிறோம். இந்த திரைசீலைகள் மற்றும் மிதியடிகளை எப்போதாவது சுத்தம் செய்பவர்கள், ரொம்பவும் சிரமப்பட வேண்டி இருக்கும். இவற்றைத் துவைப்பதற்கு நேரம் இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நிமிடத்திற்குள் சுத்தமாக துவைத்து எடுத்து விடலாம். நீங்கள் குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைப்பது போல சுடு தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். அதை அரை பக்கெட் அளவிற்கு ஊற்றி கால் பக்கெட் சாதாரண பச்சை தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குளிப்பதற்கு பொறுக்கும் அளவிற்கு சூடு இருந்தால் போதும், அதிகம் சூடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சூடாக இருக்கும் இந்த தண்ணீரில் ஒரு பாக்கெட் அளவிற்கு ஷாம்புவை கத்தரித்து கலக்கி ஊற்றுங்கள். அல்லது நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடரையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு போட்டுக் கொள்ளலாம். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா போட்டு கொள்ளுங்கள். பேக்கிங் சோடா கிருமிகளையும், துர்நாற்றத்தையும் போக்க வல்ல அற்புதமான ஒரு பொருளாக இருக்கின்றது. மிதியடிகள், திரைச்சீலைகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகள், கிருமிகள் அனைத்தையும் பேக்கிங் சோடா ஈர்த்துக் கொள்ளும். இதனால் நீங்கள் திரைச்சீலைகள் மற்றும் மிதியடிகளை தனித்தனியாக தயார் செய்து மூழ்கும் அளவிற்கு அமிழ்த்தி ஒரு ஒருமணி நேரம் அப்படியே இதே போல ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு எடுத்துப் பாருங்கள் எல்லா அழுக்குகளும் அடியில் படிந்திருக்கும். அதன் பிறகு திரைச்சீலைகளை கையில் லேசாக துவைத்து அலசினால் போதும், பளிச்சன மாறிவிடும். மிதியடிகளை கீழே போட்டு கால்களால் லேசாக தேய்த்துக் கொடுங்கள் அல்லது பிரஷ் பயன்படுத்தி லேசாக தேயுங்கள் போதும். அதன் பிறகு ஓரிருமுறை தண்ணீரில் அலசி காய வைத்து விடுங்கள். germs ஃப்ரீ மிதி அடிகள் மற்றும் திரை சிலைகள் ரெடி! இனி ஒரு கொசு கூட ஸ்கிரீன் பக்கம் போகாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...