Monday, August 15, 2022

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்து இருக்கலாம்.

 500 கோடி டாலர் சொத்தை சேர்த்துட்டு, 62 வயசுல கிட்னி/சர்க்கரைநோயால் செத்திருக்கார் ஜூன் ஜூன் வாலா.

ஒரு மனுசன் வாழ்நாள் முழுக்க உட்கார்ந்து செலவு செய்தாலும் 400 மில்லியன் டாலர் (40 கோடி டாலர்)க்கு மேல செலவு செய்ய முடியாதுன்னு ஒரு ஆய்வில் படிச்சேன்
1986ல் தன் 56வது வயதில் வாரன் பப்பட் பில்லியனர் ஆனார். இப்ப 91 வயசில் ஆபிசுக்கு போய்கிட்டு இருக்கார். சொத்து 100 பில்லியன் (10,000 கோடி) டாலரை தாண்டிடுச்சு.
வாரன் பப்படின் ஊர் நெப்ராஸ்காவுக்கு ஒரு ஜனவரி மாசம் போனேன். நெப்ராஸ்கா ஒரு விவசாய நிலம். எங்கே பார்த்தாலும் பண்னைகள், பனி, கொடுமையான குளிர். மக்கள் தொகை மிக குறைவு. அதன் நெடுஞ்சாலைகளில் பேப்பர் படிச்சுட்டு காரை ஓட்டலாம். எந்த விபத்தும் நடக்காது. ஏனெனில் எதிரே எந்த காரும் வராது
அதன் குளிர் எல்லாம் சொல்லும் தரமல்ல. சும்மா கொன்னு எடுத்துடும். அந்த ஊர்ல இந்த மனுசன் 91 வயசுவரை வாழ்ந்துட்டு இருக்கார். அங்கே உருப்படியான ஒரு உணவகம் கூட இல்லை. மனுசன் மெக்டானல்ட்ஸ்ல காலை உணவு சாப்பிட்டுட்டு இருக்கார். (நிஜமா தான்)
நானா இருந்தால் 1986ல் பில்லியன் டாலரை எடுத்துட்டு ஜாலியா போர்ச்சுக்கல் அல்கார்வே தீவுகளில் போய் செட்டில் ஆகியிருப்பேன். வருடம் முழுக்க இதமான தட்பவெப்பம், உணவுக்கு பிரஷ்ஷா பிடிச்ச மீன், காலாற நடை...ஜூன் ஜூன் வாலாவா இருந்தாலும் இதைத்தான் பண்ணிருப்பேன். நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு சில மில்லியன் டாலர் போதும்.
இதுக்கு தான் நம்ம இலக்கியங்களில் "அறம், பொருள், இன்பம், வீடு" என நாலு விசயங்களை சொல்லி இருந்தார்கள். பப்படும், ஜூஞூன்வாலாவும் "அறம், பொருள்" என்பதுடன் நிறுத்திவிட்டார்கள்.
மூணாவது ஸ்டேஜான இன்பம் என்பதுக்கே போகலை. அப்புறம் வீடு எனப்படும் துறவி ஸ்டேஜ் வேற இருக்கு. அதுக்கு எங்கே போக?
கோல்டன் இயர்ஸ் எனப்படும் ஐம்பது, அறுபதுகளை ஜாலியா நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்து இருக்கலாம். வாழ்க்கை இன்பமா இருக்கும். உடம்பு முடியாத காலகட்டத்தில் துறவி ஆகிடலாம்.
அதை விட்டுட்டு நெப்ராஸ்காவில் 91 வயசில் வேலைக்கு போய்கிட்டு இருப்பதும், 62 வயசுல செத்துபோறதும்னு..என்ன வகை #பிசினஸ்_பிஸ்தாக்கள் வாழ்க்கை இது எல்லாம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...