Thursday, August 18, 2022

அபூர்வ ராகங்கள்.

 ஒரு அமெரிக்கரும் தமிழரும் மதுக்கடையில் அவர்களது குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழர் அமெரிக்கரிடம் " எங்கள் நாட்டில் காதலித்தவரை திருமணம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள். எனது பெற்றோர்கள் பார்த்த ஒரு கிராமத்துப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு முன் அவளை நான் பார்த்ததே இல்லை. இதை நாங்கள் 'arranged marriage' என்று கூறுகிறோம். எனது விருப்பத்துக்கு எதிராகவே எனது திருமணம் நடந்தது. இப்போ வாழ்க்கையில நிம்மதி இல்ல" என்று புலம்பினார்.

அடுத்ததாய் அமெரிக்கர் அவரது பிரச்சனைய சொன்னார் "
" அமெரிக்காவுல காதலிதவரையே திருமணம் செய்யலாம்., உதாரணமா எனது வாழக்கையைச் சொல்கிறேன்.,நான் மூன்று ஆண்டுகளாக மிகவும் நேசித்த ஒரு விதவையதான் திருமணம் செய்துகொண்டேன். அவளுக்கு ஏற்கனவே ஒரு பிராயமான பெண்ணிருக்காள். சிலவருடங்களுக்குப் பிறகு எனது தந்தை எனது,மனைவியின் மகளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். எனவே எனது அப்பா எனக்கு மருமகன் ஆனார், நான் அவருக்கு மாமனாரானேன். இப்போது சட்டபூர்வமாக எனது மகள் எனக்கு அம்மாவானாள். அப்படியானல் எனது,மனைவி எனக்கு ஆச்சியாவாள் (.அம்மாவின்,அம்மா). எனக்கு ஒரு மகன் பிறக்கிறான், இப்போது,என் மகன் எனது அப்பாவுக்கு மைத்துணர் ஆகிறான். எனக்கு மாமா ஆகிறான் (அம்மாவின் தம்பி) இப்போது எனது அப்பாவுக்கு ஒரு மகன் பிறக்க உறவின் முறை மீண்டும் சிக்கலாகிறது எனது அப்பாவின் மகன் எனது தம்பியே அவனே பேரனும் ஆவான். " என்று கூறிமுடித்தார். நம்மாளுக்குத் தலை சுற்றியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...