ஒருகிராமத்தில் சந்நியாசி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். களைப்பாக இருந்ததால் அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்.
அவ்வழியேவந்த ஒருவாலிபரும் அந்த மரத்தடியில் வந்து உட்கார்ந்தார்.
அப்போது அவ்வாலிபர் சந்நியாசியிடம்
"கடவும் எல்லா இடத்திலும் இருக்கிறார்ன்னு சொால்றீங்க. பிறகு ஏன் சிலைவைத்து கும்புடுறீங்க "
என்று கேட்டார்.
அதற்கு அச்சாந்நியாசி சிரிதாக ஒரு புன்முருவல் மட்டுமே செய்துவிட்டு அமைதியானார்.
பிறகு மறுபடியும் அவ்வாலிபர்
" அந்த சிலை கல்லுதான ? அதுக்கு என்ன உயிரா இருக்கு ?
அத கும்புடுறது மூடத்தனம் இல்லையா ? " என்றார்.
அதற்கும் அந்த சாமியார் சிறிதாக சிரித்தார்.
அந்த வாலிபரோ விடுவதாயில்லை.
" எனங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க பதிலே சொல்ல மாடேங்கிறேங்க ? "
என்றார்.
அப்போது அச்சந்நியாசி அருகிலிருந்த ஒரு சிலையைச் சுட்டிக்காட்டி
"நீ போய் அந்த சிலை மேல் காரி துப்பிட்டு வா " என்றார்.
அதற்கு அந்த வாலிபர்
" அது எங்க பெரியார் சிலைங்க. அவரு மேல நான் எப்படி காரிதுப்ப முடியும்"
அந்த சந்நியாசி
" இதுவும் கல்லாலான சிலைதான ? அதற்கென்ன உயிரா இருக்கு ? நீ போய் காரித்துப்பிட்டு வா "
என்றார்.
அதற்கு அந்த வாலிபர் மறுத்துவிட்டார்.
அடுத்து அந்த சந்நியாசி
" நீ அந்த கல்லில், அந்த சிலையில் இறந்து போன பெரியாரைக் காண்கிறாய். அதனால் அதனை வெறும் கால்லாக நினைத்து உன்னால் அதன் மேல் காரித் துப்ப முடியவில்லை. நீ எப்படி அக்கல்லில் பெரியாரைக் காண்கிறாயோ
அதுபோல்தான்,அவர்களும் அச்சிலைகளில் இறைவனைக் காண்கின்றார்கள் "
என்றார்.
No comments:
Post a Comment