Friday, October 14, 2022

*திருக்கோவலூர்!* *நடுநாட்டு திவ்ய தேசம்!*

 *கோபால்* என்பதுதான் *கோவல்* என்று திரிந்து *கோவலூர்* ஆயிற்று!

ஆழ்வாருக்கு முதலில் *பிராட்டி* தான் சேவை சாதித்தாள், அதனால் *திரு* வுடன் சேர்ந்து *திருக்கோவலூர்* ஆயிற்று!
ஆண்டாள் இவரை *ஓங்கி உலகளந்த உத்தமன்* என்று கொண்டாடுகிறாள்!
*அதமன், மத்யமன், உத்தமன்*:
அதமன் என்றால் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்;
மத்யமன் என்றால் தானும், பிறரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்;
உத்தமன் என்றால் தனக்கு சிறுமை வந்தாலும், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்!
எல்லா ஜீவராசிகளிடமும் ச்ரேயஸை விரும்புபவன் ஸ்ரீமந் நாராயணன்!
தனக்கு எந்த தாழ்வு வந்தாலும் அடியார்களுக்காகவே பல அவதாரங்களை எடுத்து அவர்களை ஆஸ்ரயிப்பவன், அதனால் *உத்தமன்*!
உலகையே அளந்து சுபிக்ஷமாக்கிய வாமனாவதாரம் - திருவிக்ரம அவதாரம்! இதில் ஸம்ஹாரமே இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த அவதாரம், அதனால் *உத்தமன்*!
"அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம்-
முடிவண்ணம் ஓராழி வெய்யோன் ஒளியும் ஃதே அன்றே,
ஆராழி கொண்டார்க்கு அழகு!"
-பேயாழ்வார்
-
*அன்று "திரிவிக்ரம" அவதாரம் ஏற்று, உலகங்கள் அனைத்தையும் அளந்த எம்பெருமானின் திருவடியானது தாமரைமலர் போன்று சிவப்பு நிறமாகும்!*
*அவன் திருமேனியின் நிறம் பூமியைச் சூழ்ந்துள்ள கடலின் கருத்த நிறமாகும்!*
*அவனுடைய திருமுடி சூரியனின் ஒளி நிறத்தினை ஒததிருக்கின்றது!*
*தன் திருக்கரத்தில், திருவாழியானை ஏந்தியிருக்கின்ற அவ்வெம்பெருமானின் அழகுதான் என்னே! என்னே!*
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...