எனக்கு அதிர்ச்சியில் எனது இதயத்தின் இயக்கமே சில விநாடிகள் நின்று போனதுபோல் உணர்ந்தேன். பின்பு சுதாரித்துக் கொண்டு ஏன் இப்படி சொல்கிறீர்கள்.
உலகமே போற்றும் உன்னத மனிதர் மறைந்துவிட்டார் என்ற துக்கத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துக்க த்தில் சோகத்தில் மூழ்கி இருக்கும் இந்த நிலையில் அப்துல் கலாம் தான் உங்கள் முதல் எதிரி என்று சொல்கிறீரே நீங்கள் யார் என்று கேட்டேன்.
1.ஆணும் பெண்ணுமாய்வந்த இரட்டையர்களில் ஒருவர். நான் கல்லாமை, இவள் அறியாமை, கலாம் எங்களை அவரிடம் நெருங்க விடவே இல்லை அதனால் தான் நாங்கள் அவரை எங்கள் எதிரி என்கிறோம் என்றார்கள்.
2. என் பெயர் சோம்பல்: என்னோடு அவர் ஒரு விநாடி கூட செலவழித்தது கிடையாது அதனால்தான்…
3. கோவம் (சினம்): நான் அவரது கண்களிலும் உதடுகளிலும் அவ்வப் போது வெளிப்பட்டு ஆதிக்கம் செய்ய முற்பட்டாலும் என்னை அவர் என் தலையில் தட்டி அடக்கிவிடுவார். அதனால்தான்…
4.அகங்காரம்: நான் அவரது மூளையை சர்வாதிகாரம் செய்ய நினை த்தேன் அதற்கு அவர் என்னை அனுமதிக்க வில்லை அதனால்தான்…
5. அதிகாரம்: நான் ஏழைகளையும் எளியவர்களை ஆட்டிப் படைத்திருக் கிறேன்.ஆனால் கலாம் என்னை ஆட்டிப்படைத்து அதிகாரம் செய்து விட்டார் அதனால்தான் …
6. பணம்: நான் பல தலைகளில் கிரீடங்களாக அலங்கரித்திருக்கிறேன். ஆனால் அவரோ என்னை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண் டார்.அதனால் தான் ..
7. பதவி: சுக போகங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கச் சொன்ன போதும் எனது பேச்சை துளியும் மதிக்காமல் எளிமைக்கு உற்ற நண்பனா க இருந்துவிட்டார் அதனால்தான் ..!
8. ஓய்வு: அவருக்கு என்னை யாரென்றே தெரியாது? மேலும் என்னை தெரிந்து கொள்ள எந்த முயற்சி எடுக்க வில்லை அதனால்தான்…!
No comments:
Post a Comment