புனித நீராடல்... விதி என்ன?!
தினமும் நதி நீராடல் என்பது ஒரு வகை... நதியில் நீராடும் போது... சோப்பு / உபயோகிக்க கூடாது...
நதியில் இறங்கும் முன்பு... நீரில் கால் வைக்காமல்... முதலில் கையால் நீரை தொட்டு, நமக்கு அதை ப்ரோக்ஷனம் செய்து கொண்டு... பாவனையாக அனுமதி பெற்று நீரில் கால் பதிக்க வேண்டும்...
கழுவுதல், கொப்பளித்தல் போன்றவை கூடாது...
அகால குளியல்கள் ... மரண துக்க காலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது... ஆனால் அப்போதும் மேலே கூறிய விதிகள் பொருந்தும்...
வெளியூரில்... புண்ணிய நதி தீரத்தை கடக்கும் போது அகாலத்தில் நீரை புரோக்ஷனம் செய்து கொள்ளலாம்...
புண்ணிய ஸ்நானம் என்றால்... காலையில் வழக்கம்போல தூங்கி எழுந்து சென்று குளிக்கக் கூடாது...
வீட்டில் ... குளித்து... மடி/ மாற்று வஸ்திரங்கள் அணிந்து... உடல் மன சுத்தியோடு சங்கல்பித்து நீராட வேண்டும்.
நதியில்/ நீர் நிலையில்... பரிகாரம் என்ற பெயரில்... வஸ்திரம் கழட்டி எறிவது போன்றவை கூடவே கூடாது...
துலா போன்ற புண்ணிய ஸ்நானம் செய்யும் போது சங்கல்பித்து... அதாவது திட சித்தம்/ திட்டமிட்டு அங்கே வஸ்திரம்/ அன்னம்/ சொர்ணம் (பணம்) தானம் செய்ய வேண்டும்...
அகால/ தீட்டு குளியல் தவிர மற்ற நேரத்தில்... சரணாகத வத்ச்சலா... ஆபத் பாந்தவா... அனாத ரக்ஷஹா... என்று 3 முறை அர்க்கியம் கொடுக்க வேண்டும்...
திருக்குளம் என்றால் கிழக்கு நோக்கியும்... நதிகளில் நதி பிரவாகம் வரும் திசை நோக்கியும் அர்க்கியம் தரவேண்டும்...
வருண ஜெபம் தவிர மற்ற நேரம்... நீரில் நின்ற படி... மர்ம உறுப்புக்கள் நனைய ஜபம் போன்றவற்றை நீரில் நின்று/அமர்ந்து செய்யக் கூடாது... நதிக்கரை... தீரத்தில் அமர்ந்து செய்யலாம்...அதுவும் ஈர வஸ்திரம் நீக்கி...
ஈர வஸ்திரம் அணிந்து அபர காரியம் மட்டுமே செய்யலாம்...
புண்ணிய ஸ்நானம் செய்துவிட்டு நீர் சொட்டச் சொட்ட வீடு திரும்ப கூடாது... மாற்று வஸ்திரம் தரித்தே வீடு திரும்ப வேண்டும்...
புனித நீராடலுக்குப் பின் சுகாதாரம் கருதி ... என்ற பெயரில் மறு குளியல் கூடவே கூடாது...
சரி இப்படி தீர்த்தங்கள் தோறும்... விதிப்படி நாம் குளித்தால் / தானங்கள் செய்து/ அர்க்கியம் கொடுத்து விட்டால், நம் பாவங்கள் கரைந்து புன்னியங்கள் சேருமா?!
இப்படி புண்ணிய தீர்த்தத்தில் நம் மடியில் சேனைக் கிழங்கு ஒன்றையும் கட்டிக்கொன்டு நீராடி... அதன் காரல்/ அரிப்புத் தன்மை நீங்கும் என்றால்... நம் பாவங்களும் நீங்கும்... அவ்வளவே!!!
இப்படித்தான் குளிக்க வேண்டும் என்பது விதி... follow the rules and regulations... இப்படி குளிப்பது நம் duty... so, no reward... மாறாக... விதி மீறல் செய்தால் பாவம்... அனுபவிக்க வேண்டும்...
சார்... சங்கல்பித்து, அர்க்கியம் கொடுத்து, வஸ்திர/ அன்ன/ ஸ்வர்ண தானம் எல்லாம் கொடுத்தேனே...
சகல இஷ்ட காம்யார்த்த சித்யர்த்தம்... ஆயுள் ஆரோக்கிய அபிவ்ருத்யர்த்தம்... என்றெல்லாம் சங்கல்பம் செய்து கொண்டேனே...
ஆம்... அப்படி இக சுகங்கள் வேண்டி சங்கல்பித்துக் கொண்டால்... அதை இன்னும் ஒரு பிறவி எடுத்து அனுபவிக்கும் காலத்தில்... விதியின் வசத்தால்... மேலும்/ புண்ணிய - பாவ கர்மாக்கள் செய்து தொல் (தொடரும்) வந்த (இப்போது செய்த) வரு (இனி நம்மை சேரப் போகும்) கர்மங்கள் அதாவது பிராரப்த/ சஞ்சித கர்மாக்கள் நம்மை ஜென்மங்கள் தொடரும் சூழலுக்குள் மூழ்க வைத்துவிடும்...
இதிலிருந்து தப்ப.... இரு வினை ஒப்ப... மல பரிபாகம் அடைய.... பாவங்களை தவிர்த்து... அவரவர் குல/ ஆசார கர்ம அனுஷ்டானங்களை அனுசரித்து அதே நேரம் அந்த கர்மாக்கள் உத்பவிக்கும் புண்ணியம் நம்மை சேராமல்... பிறவிப் பெருங்கடல் நீந்துவது எப்படி?
No comments:
Post a Comment