சென்னை சத்தியபிரியா கொலையை பற்றியும் #Justiceforsatyapriya என சமூக வலைதளங்களில் எப்பொழுதும் போல் பதிவிட்டு கடந்து செல்லப் போகிறோமா..???
சத்தியப் பிரியாவை பின் தொடர்ந்து துன்புறுத்தி வந்த சதீஷ் பத்தி அவளின் பெற்றோர் காவல்துறைக்கு புகார் அளித்த பிறகும் கொலையாளி சதீஷின் தந்தை காவல்துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரியாக இருந்த காரணத்தினால் சதீஷ் தப்பித்துவிட்டார்...
சத்திய பிரியா என்கிற பெண்ணை இரத்தமும் சதையும் கொண்ட, அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு சக மனுஷியாக பார்க்காமல்,(இதை உணர வைக்காமல் விட்டது சதீஷின் பெற்றோர்கள் செய்த பொறுப்பின்மை)
காதல் என்கிற பெயரில் தன்னோட காமப்பசியை அடக்க கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக மட்டுமே பார்த்த சதீஷ் “தனக்கு கிடைக்காத சத்திய பிரியா என்கிற “பொருள் “ வேறு யாருக்குமே கிடைக்கக் கூடாது”என்பதற்காக அவளை ரயில் முன்னாடி தள்ளிவிட்டு கொலை செய்கிறான்.“
சத்திய ப்ரியாவிற்கு சதிஷ் கொடுத்து வந்த தொல்லைகள் பற்றி தெரியப்படுத்தியும் கூட அவனிடமிருந்து தன் மகளோடு உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையுடன்
செல்ல மகளோட கொலையை தடுக்க முடியாத தந்தை மனது உடைந்து போய் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தியாவிலேயே No.1 மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று நெஞ்சைத் தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு, ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயாக, சத்திய பிரியா குடும்பத்தை நினைத்து கனத்த இதயத்துடன் கேட்கிறேன்..
No comments:
Post a Comment