உணவை வைத்து
என் குடும்பத்தில்
என்னுடன் சேர்த்து
ஏழுபேர் நாங்கள்
ஊத்திய மழையில்
ஊரே வெள்ளம் அன்று
உயிர் பிழைத்த நானும்
உயிரான பிள்ளையும்
அடைகலம் புகுந்தோம்
அனுமதி இன்றி உங்கள் வீட்டில்
அன்றிரவு முழுவதும் பட்டினி தான்
அடுத்த நாள் அறிந்தேன்
அதிகமான உணவை நீங்கள்
அளவுக்கு அதிகமாக வீசுவதை
வீசும் உணவுகளே
விருந்தாய் அமைந்தது எங்களுக்கு
விரும்பாத விருந்தாளியாய்
தங்கிகொண்டோம்
அடிக்கடி என் பிள்ளைக்கு
அடித்து கூட சொல்லுவேன்
அவர்கள் தூங்குவார்கள்
அமைதியாய் இரு என்று
அடம்பிடிக்கும் என் பிள்ளை
ஆசை உணவிற்கு ஏமாந்து
அகப்பட்டான் உங்கள் பொறியியல்
அகாலமரணம் அடைந்தான்
அனுமதியின்றி குடியேறினோம்
அடித்து விரட்டுங்கள் இல்லையேல்
அடித்து கொள்ளுங்கள்
சாப்பாடு காட்டி
சாவை தராதீர்கள்
உணவில் தான்
உயிர் போக்க வேண்டுமா?
நாக்கில் ருசி பட்டதுமே
நசுக்கியது கம்பிகள் கழுத்தை
நாங்கள் விரும்பியா எலிகளானோம்
நாகபாம்புகளை விட
நய வஞ்சகம் கொண்ட நீங்களே
விஷம் அதிகம் கொண்டவர்கள்
உயிருக்காய் ஒரு விண்ணப்பம்
உணவில் உயிர் எடுப்பதை
உடனடியாக நிறுத்துங்கள்
இப்படிக்கு
இறந்துபோன எலியின் - தாய் எலி
No comments:
Post a Comment