'காதலுக்கு ஜாதி இல்லை; மதமும் இல்லை' என, 60 ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டு எழுதினார், கவிஞர் கண்ணதாசன். இப்போது, அதற்கான சூழல் கனிந்து வந்திருக்கிறது. சமீப நாட்களாக, தமிழகத்தில் ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதாக பிரசாரம் துவங்கி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
ஜாதியும், மதமும் இல்லாத, ஒரு சமூகத்தில் வாழ மாட்டோமா என்பது, நம் நீண்ட கால கனவு; அது, நனவாக கனிந்து வருவது, மனதிற்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது; நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். அதற்கேற்றாற்போல, சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கும் போது, 'ஜாதி, -மதம் அற்றவர்' என்று குறிப்பிட்டு வாங்குவதும் நடந்து வருகிறது.
ஹிந்து என்ற பெயரில், ஒரு மதமே இல்லாத போது, அந்த மதத்தின் பெயரால் எப்படி இட ஒதுக்கீடு சலுகைகளை தொடர்ந்து கொண்டிருக்க முடியும்... அது தவறல்லவா? எனவே, மத்திய -- மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு, ஹிந்துக்களில் பல்வேறு பிரிவினருக்கும், ஜாதியினருக்கும் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் சலுகைகளையும், வழங்கப்பட்ட சலுகைகளையும் உடனடியாக ரத்து செய்து, அனைவரையும் பொதுப்பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்!
No comments:
Post a Comment