விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்குவாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின், தம்பதியினர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர்.
மேலும், திருமணம் ஆன 4 மாதத்திற்குள் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதால் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலமே குழந்தைகள் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால்,இந்த விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று விக்கி - நயன்தாரா குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை விசாரிக்கவும் பின் தேவைப்பட்டால் விக்கி - நயனிடமும் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமானதம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.
No comments:
Post a Comment