Tuesday, October 18, 2022

தேங்கல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி சம்பந்தமாக விண்ணப்பம்.

 அனுப்புதல்

எஸ் .பழனிவேல்
த/பெ
ஆர் சீரங்கன்
3/66, ஆனைப்பட்டியான் காலனி
தேங்கல்பாளையம்
அஞ்சல்
இராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
பின்கோடு 636301
செல் எண் 9566829470
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை 600009
பொருள் :
தேங்கல் பாளையம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி சம்பந்தமாக
ஐயா
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன.
இதுவரை தேங்கல் பாளையம் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் போட்டியிட முடியாத நிலை இருந்தது .
2019 ஆம் ஆண்டு நடந்த தமிழக ஊராட்சி மன்ற தேர்தலில் தேங்கல் பாளையம் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அவ்வாறு ஒதுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் எதாவதுபலன் அடைந்தார்களா?
என்றால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும்.
காரணம் என்னவெனில் திரு .தமிழ்மணி அவர்கள் முன்னாள்தேங்கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.
வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் திராவிட முன்னேற்ற கழகம்.
இவருடைய காட்டில் தற்போதைய தாழ்த்தப்பட்ட அருந்ததிய வகுப்பைச் சேர்ந்த திரு சத்யராஜ் அவர்கள் கடந்த 10 வருடங்களாக பண்ணையத்தில் இருந்தார்.
தேங்கல்பாளையம் ஊராட்சியில் பல பட்டதாரி இளைஞர்களும் முதுநிலை பட்டதாரி இளைஞர்களும் பல இன்ஜினியர்களும் பல சமூக ஆர்வலர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் படித்து இருக்கின்றனர்.
இதே கிராமத்தில் பிறந்து வளர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம்.
ஆனால் திரு தமிழ்மணி அவர்கள் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி
தான் பலன் அடைய வேண்டும்.
என்ற சுயநலத்தில் தன்னுடைய காட்டில் பண்ணையத்தில் இருக்கும்
திரு .சத்யராஜ் அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்து தேங்கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி பெற அனைத்து உதவிகளையும் செய்தார்.
தற்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த திரு சத்யராஜ் அவர்கள் தேங்கல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் .
ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தற்போதைய தலைவரான திரு சத்யராஜ் அவர்கள் முன்பு எவ்வாறு திரு தமிழ்மணி அவர்கள் காட்டில் பண்ணையத்து வேலை செய்தாரோ ?
அதே வேலையை அதே காட்டில் அச்சு பெறலாமல் அதே நிலையில் செய்து வருகிறார் .
முன்பு முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்
திரு தமிழ்மணி அவர்கள் தற்போதைய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் திராவிட முன்னேற்ற கழகம்
இவர் முன்பு எவ்வாறு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும்போது என்ன பணி செய்தாரோ
அதே பணியை அச்சு மாறாமல் சிறிதும் பிசகாமல் உண்மையான தலைவர் ஊராட்சி மன்ற தலைவர்
போன்று அனைத்து வேலைகளையும் அனைத்து ஊராட்சி மன்ற பணிகளையும் இவர் தான் செய்கிறார்.
முன்பே இந்த சம்பவத்திற்காக முதலமைச்சரிடம் மனு செய்து விசாரணைக்கு வந்த போது வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
ஊராட்சி பணி தொய்வு இல்லாமல் திறம்பட நடக்கிறது என தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
நாம் கேட்பது ஓர் தாழ்த்தப்பட்ட அருந்ததிய வகுப்பு சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பண்ணையத்தில் இருக்கலாமா?
எனக் கோரிக்கை வைத்தால் ஊராட்சி மன்ற பணி தொய்வு இல்லாமல் நடைபெறுகிறது.
எந்த பிரச்சனையும் இல்லை என வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
தமிழக அரசுக்கு அறிக்கை கொடுக்கிறார் .
ஒரு தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற பணியை சுதந்திரமாக தன்னுடைய வீட்டிலிருந்து செய்ய வேண்டும்.
அல்லதுகிராம அலுவலகத்தில் இருந்து செய்ய வேண்டும்.
அப்போதுதான் ஊர் பொதுமக்கள் உண்மையான ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைப்பார்.
உண்மையான ஊராட்சி தலைவருக்கு மரியாதை கிடைக்கும்.
உண்மையான ஊராட்சி தலைவர் சுதந்திரமாக ஊராட்சி மன்ற பணிகளை செய்ய முடியும் .
மற்றவர் காட்டில் வேலைக்குச் சென்றால் முன்பு செய்த வேலையை இப்போதும் செய்தால் எவ்வாறு ஊராட்சி மன்ற பணிகளை செய்ய முடியும்.
இவ்வாறு எனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதற்காக தேங்கல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தேவை இல்லையே.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த திரு தமிழ்மணி அவர்கள் தேர்தல் நடத்தா மலேயே அவரே ஊராட்சி மன்ற தலைவர் என பிரகடனப்படுத்தி இருக்கலாம். அல்லவா?
எதுக்கு தேவையில்லாமல் ஊராட்சி மன்ற தேர்தல் ?
இந்த நிகழ்வு ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறோம்.
தமிழக ஊராட்சி மன்ற தேர்தல் ஆணையர் இதில் தலையிட்டு உரிய நிவாரணம் பெற்று தருவாரா?
தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையான தாழ்த்தப்பட்ட தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற பணிகளை சுதந்திரமாக செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
மனித உரிமை ஆணையம் தேங்கல் பாளையம் ஊராட்சி மன்ற நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனைத்து வேலைகளையும் செய்கின்ற போது
எதற்கு பெயர் அளவிற்கு தாழ்த்தப்பட்டோருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
இந்தப் பதவி தேவையில்லையே.
இந்த பதவியை தேர்தல் நடத்தாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த திரு தமிழ்மணி அவர்களிடமே கொடுத்து விடுங்கள் .
அவர் சந்தோசமாக ஊராட்சி மன்ற பணியை செய்யட்டும்.
வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை செய்து அறிக்கை கேட்டால் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காட்டில் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்கிறார்.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தான் அனைத்து வேலைகளையும் செய்கிறார் என தெரிந்தும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
ஆதலால் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியாகசட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த திரு தமிழ்மணி அவர்கள் நிர்வகிக்கும் போது தாழ்த்தப்பட்டவருக்கு
எதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி?
எங்களுக்கு தமிழக அரசு உரிய நியாயம் கிடைக்க பாடுபடுமா ?
இந்த நிகழ்வின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா ?
நன்றி !வணக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...