சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலையில் செய்த சேவைகளுக்காக அவரது பிறந்த நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
இன்று நடக்கும் இப்பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் வழக்கமான பூஜைகளுடன் மன்னர் குடும்பத்துக்காக சிறப்பு பூஜைகள் நடக்கும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன் பின்னர் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்படும்.
கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ.,17 அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment