அனைவருக்கும் வணக்கம்.
ஆத்திச்சூடியில் எனக்கு ஒரு சந்தேகம்.
"ஐயமிட்டு உண்" என்ற வரி/செய்யுளின் பொருளில் உள்ளது.
ஆனால் 'ஐயமிட்டு உண்" என்ற குறளுக்கு மட்டும் வேறு மாதிரி விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதாவது நாம் உண்ணும் உணவை ஐந்து பேர்களுக்கு பகிர்ந்தளித்து உண்ண வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆனால் எனக்குள் என்ன தோன்றுகிறது என்றால்,
"நமக்கு உண்பதற்காக யார் என்ன தந்தாலும் அதை ஐயத்துடன் அதாவது சந்தேகத்துடன் தான் உண்ண வேண்டும்" என்று தோன்றுகிறது.
இங்கே "யார்" என்று குறிப்பிட்டிருப்பது நமக்கு அறிமுகம் இல்லாத/முன்பின் பார்த்திராத நபர்கள் என்று பொருள் கொள்ளவும்.
எனது தவறா அறியாமையா தெரிந்தவர்கள் விளக்கவும்.
No comments:
Post a Comment