சில மாதங்களுக்கு முன் அக்காவின் பேரனுக்கு கல்யாணம்... கலந்து கொள்ள சென்னை சென்ற எனக்கு திருமண விசேஷத்தில் கலந்து கொள்ள வந்த உறவினர்களுடன் இரு நாட்களாக பேசி மகிழ்ந்ததில் பொழுது போனதே தெரியவில்லை..
திருமண நிகழ்வுக்கு பின் அக்காவும் எனது உடல் நிலை ஆரோக்கியம் பற்றி விசாரித்தார்கள். நானும் மைய்ல்டாக உள்ள சுகர்க்கும், பிரசர், நரம்பு வலிமைக்காக மாத்திரைகள் தொடந்து சாப்பிட்டு வருவதாக கூறினேன்.. மேலும் இங்கு சென்னையில் மருந்துகடையில் வாங்கும் மருத்துகளுக்கு டிஸ்கவுண்ட் எவ்வளவு தருகிறார்கள் என்று கேட்டேன்..
விருதுநகரில் அநேக மருந்து கடைகளில் விலை அதிகமான மருந்துகள் கூட MRP யில் 15% தள்ளுபடி செய்து மருந்துகள் தருவதால் மலிவாக கிடைப்பதை பெருமையாக சொன்னேன்.. அதை கேட்டு சிரித்து கொண்ட சகோதரியும், என்னமோ ஓசியாக தருவது போல் சந்தோச படுகிறாயே.. இங்கே எனது வீட்டுக்கு அருகே மக்கள் நல மருந்தகங்கள் என மத்திய அரசு கடைகளை திறந்து உள்ளது.
எனக்காகும் மருந்துகளை மாதம் ரூ1000 கொடுத்து தனியார் கடைகளில் வாங்குவதை அதே மருந்தை மந்திய அரசு திறந்துள்ள கடைகளில் ரூ.290 க்கு வாங்கிக் கொள்கிறேன் என்றாரே பார்க்கலாம்.. நானும் சென்னை வாசிகளுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என எண்ணிக் கொண்டேன்..
இரு வாரங்களுக்கு முன் எனது ஊரிலும் மக்கள் நல மருந்தகம் செயல்படுவதை கண்டு எனக்கான மாத்திரைகள் அனைத்தையும் எடுத்து சென்று விபரம் கேட்டேன்.. எல்லா மத்திரைகளும் இருப்பதாகவும் நான் மாதம் தோறும் வாங்கும் மருந்துக்கு விலை குறித்து கொடுத்தார்கள். எல்லாமே நான் சாப்பிடும் மாத்திரைகள்தான் அதே காம்பெனன்ட், பார்மஸி கம்பெனிகள் பெயர்தான் வேறு.
தனியார் மருந்தகத்தில் மாதந்தோறும் நான் எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு ரூ.1400 க்கு வாங்கும் மருந்துகள் அனைத்தும் இங்கே ரூ.450 மட்டுமே... பாதிக்கும் கீழாக 35% தான். அடேங்கப்பா ரூ.950 மிச்சமா.. எவ்வளவு வருடங்களாக மருந்துகளை அதிக விலைக்கு விற்று நம்மை தனியார் மருத்துவங்கள் கொள்ளை அடித்துள்ளார்கள் என மிரண்டுதான் போனேன். மாத தேவைகளை வாங்கிக் கொண்டு அவர்களிடம் மேலும் விசாரித்தேன்..
மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் 'மக்கள் நல மருந்தகங்கள்' எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளதாக சொன்னார்கள்.
மேலும் இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 500 க்கு மேற்பட்ட மத்திய அரசின் மக்கள் நல மருந்தகங்கள் தற்போது செயல்படுவதாக சொன்னார்கள்..
மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளை லாப நோக்கம் ஏதும் இல்லாமல் மலிவான விலையில் தந்து இவ்வளவு நன்மை தரும் மத்திய சர்க்காரின் திட்டம் இது.. இதை பிரபலபடுத்தாது வியாபார நோக்கத்துக்காக மருத்தவர்கள் மூடி மறைக்கவும் செய்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது...
No comments:
Post a Comment