நம் நாட்டில், 28 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அவை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழியை பேசும் மக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர, ஒரு பொது மொழி தேவை.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, ௧௦ மாநிலங்களில், ஹிந்து மொழி பேசும் மக்கள் உள்ளனர். அப்படி, 10 மாநிலங்களில் பேசப்படும் ஒரு மொழியை, தேசிய மொழியாக அங்கீகரிப்பதில் என்ன தவறு?
இப்போது விஷயத்துக்கு வருவோம்...ஒரு கட்சி என்றால், அதற்கு ஒரு தலைவன் தான் இருப்பான்... இருக்க வேண்டும்... அது தான் முறை; நியாயம். இரட்டை தலைமையை ஆதரித்த, அ.தி.மு.க., வின் நிலை, இன்று சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல, ஒரு நாட்டுக்கு ஒரு தேசிய மொழி தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். அது தான் ஹிந்தி.
அந்த இந்திய மொழியை ஏற்றுக் கொள்வதில் இத்தனை பிடிவாதம் காட்டி, போராட்டம் நடத்தும் திராவிட செம்மல்கள், தாங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தோடு, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பானிஷ், பிரெஞ்சு, லத்தீன், உருது போன்ற வெளிநாட்டு மொழிகளையும், கொஞ்சம் கூட வெட்கமே இன்றி பயிற்று வி(ற்று)த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர்கள் முட்டாள்களாக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாக, தங்களின் புளுகு மூட்டைகளை, அப்படியே நம்பி தலையாட்டி கொண்டிருந்தால் தான், தங்கள் அரசியல் வியாபாரத்தை செவ்வனே, தங்கு தடையின்றி நடத்த முடியும் என்ற சுயநல நோக்கில், ஹிந்தியை எதிர்க்கின்றனர் கழக ஆட்சியாளர்கள்.
தனித்து நின்று டிபாசிட் கூட வாங்க முடியாத அரசியல் கட்சிகள் சில, இந்த கழகத்தின் பின்னால் அணிவகுத்து நின்று பின்பாட்டு பாடுகின்றன. மோசம் போய் விடாதீர்கள் மக்களே! இந்த மூடர்களை நம்பி ஏமாந்து, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள்.
இனியும் மூடர்களுக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்காதீர்கள் மக்களே!
No comments:
Post a Comment