அந்த காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருந்த ஒரு அரிசி தான் இந்த பூங்கார் அரிசி. இதை பெண்களின் அரிசி என்றே சொல்லுவார்கள். குறிப்பாக இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய அரிசி. பெண்களின் ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய, கர்ப்ப காலத்திலும், குழந்தை பேருக்கு பின்பும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த அரிசி உதவி செய்கிறது. மற்றபடி அயன் சிங்க் விட்டமின் சத்துக்கள் அனைத்தும் இதில் நிரம்பி இருக்கிறது. இதை சின்ன பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். ஜீரண சக்தியை சீர் செய்யக்கூடிய வேலைகளையும் இது செய்யும். சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இந்த அரிசியை சாப்பிடலாம். ஆண்களும் இந்த அரிசியை சாப்பிடலாம் தவறு கிடையாது. ஆனால் பிரத்தியேகமாக பெண்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் இந்த அரிசியை சாப்பிடுவது நன்மை பயக்கும். இந்த பூங்கார் அரிசியில் மிக மிக சுலபமான தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பூங்கார் அரிசி 2 கப், உளுந்து 1/2 கப், வெந்தயம் 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக மூன்றிலிருந்து நான்கு முறை கழுவி விட்டு, அதன் பின்பு இந்த பொருட்கள் எல்லாம் மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் ஆவது பூங்கார் அரிசியை ஊற வைத்த பின்பு தான் சமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஊறிய பின்பு இந்த எல்லா பொருட்களையும் கிரைண்டரிலோ அல்லது மிக்ஸிலோ போட்டு இட்லி மாவு போலவே அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்து விடுங்கள். ஆறி லிருந்து எட்டு மணி நேரம் புளிக்கட்டும். புளித்த பின்பு இந்த மாவை இட்லி சுடவோ அல்லது தோசை சுடவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போதும் தோசை வார்ப்பது போலவே தோசை கல்லில் மெல்லிசாக தீட்டியும் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சிவக்க விட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் கல் தோசை போலவும் ஊற்றி பரிமாறலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி வழக்கம்போல வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயமாக இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதேசமயம் எல்லோருக்கும் இந்த அரிசி சேரும் என்று சொல்லிவிட முடியாது. காரணம் நாம் வெள்ளை அரிசியை தான் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கிறோம். கொஞ்சமாக உணவோடு சேர்த்து பாருங்கள். எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து இந்த அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்க வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இந்த அரிசியை அவர்களுக்கு சமைத்து கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோலத்தான் குழந்தைகளுக்கும் இந்த அரிசியை செய்து கொடுத்தால் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப நல்லபடியா இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment