படிப்பே இல்லாமல் ஒருவன் வேலை தேடி அலைந்தான். ஒரு வழியாக தற்காலிக வேலை..I.T. கம்பெணியில் தரை துடைப்பது.
சில மாதங்களின் மேனேஜர் அழைத்தார். "உன் வேலை நிறந்தரமாகிறது. E-mail ID சொல்லு."
"அப்டின்னா என்ன...?"
IT கம்பெனில வேலை பார்க்க வந்துட்டு Email IDனா என்னன்னு தெரியாதா.. போ உனக்கு வேலையில்லை..!"
பஜாரில் அலைந்த போது ஒரு ஐடியா...துணிந்து வெங்காயம் வாங்கி சில்லறைக்கு விற்றான்.₹. 100 லாபம். தினமும் மாடாய் உழைத்து ஒரு வெங்காய மண்டி ஆரம்பித்தான். 10 பேருக்கு வேலை கொடுத்தான்.
இவனது வளர்சச்சியை பார்த்த ஒரு வங்கி அதிகாரி தங்கள் சேமிப்பு திட்டங்களை பற்றி சொல்லி ஒரு கணக்கு ஆரம்பிக்கும் படி கேட்டார்.
ஒரு அதிகாரி தேடி வரும் அளவு தான் பெரிய ஆளாகி விட்ட மகிழ்ச்சியில்
அக்கவுண்ட் ஆரம்பிக்க சம்மதித்தான்.
அதிகாரி "உங்க இ மெயில் ஐடி கொடுங்க"
"அப்படின்னா என்ன?" என்று கேட்டவனை ஆச்சரியமாக பார்த்த அதிகாரி " இமெயில் ஐடின்னா என்னனு தெரியாமலே இவ்வளவு பெரிய பிஸினஸ் மேனாயிருக்கீங்க ... தெரிஞ்சிருந்தா வேற லெவல்ல வந்திருப்பீங்க!" என்றார்.
"அட போங்க சார் அது தெரிஞ்சிருந்தா ஒரு ஐ.டி. கம்பெனில தரை துடைச்சிக்கிட்டு இருந்திருப்பேன்!"
No comments:
Post a Comment