Thursday, December 8, 2022

துக்ளக் படத்தின் காட்சிகள் கண் முன்னே வந்து செல்கின்றன !!!

 ஆக, நமது மந்திரி சபையின், ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

கூட்டத்திற்கு கூப்பிட்டு அனுப்பியதற்கு ரொம்ப நன்றி சுல்தான். எங்க கிட்ட என்ன ஆலோசனை கேட்கப் போகிறீர்கள்??
ஆக, உங்களிடம் எல்லாம் ஆலோசனைகளை யார் கேட்டது. ஆக, எனக்கு ஆலோசனைகள் சொல்லும் அளவுக்கு அறிவு உங்கள் யாருக்கும் இல்லை. அகில பாரதமுமே என் ஆலோசனையை கேட்டு தான் நடக்கிறது. ஆக, நீங்கள் பிடுங்கும் எந்த அணியுமே தேவையில்லை.
அப்புறம் எதற்காக இந்த ஆலோசனை கூட்டம்????
ஆக, என் ஆலோசனைகளை கேட்டு அதன் படி நீங்கள் நடக்க வேண்டும். ஆக, அதுக்காக தான் கூப்பிட்டு விட்டேன்.
என்ன சுல்தான் இப்படி சொல்லிட்டீங்க????
ஆக, அப்படித்தான் சொல்வேன். இஷ்டம் இல்லாதவர் வெளிநடப்பு செய்யலாம்.
சுல்தான், இதென்ன சட்டசபையா வெளிநடப்பெல்லாம் செய்வதற்கு???? இந்த கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்க போறோம் அதை சொல்லுங்கள்.
ஆக, என் மகன் பதூதாவை துணை முதல்வராக அறிவிக்கப்போகிறேன்.
அது ஏற்கனவே தெரிந்தது தானே சுல்தான். அவர் பிறக்கும் போதே கட்சி கொடியோடு பிறந்தவர் ஆயிற்றே.
ஆக, என் குடும்ப உறுப்பினர்களுக்கே குடுத்த இலாக்காக்கள் போதவில்லை என்று கோபத்தில் இருக்கிறார்கள். ஆக, உங்கள் இலாக்காக்கள் பறிக்கப்படலாம்.
என்ன எங்களுக்கு இனி இலாக்காக்களும் இல்லையா???? அப்ப நாங்களெல்லாம் என்ன தான் செய்வது????
ஆக, இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்களோ, அதையே செய்யுங்கள். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள், ஆத்து மணல் அள்ளுங்கள், டீக்கடை, பஜ்ஜி கடைகளில் பாக்ஸிங் பழகுங்கள், கடப்பா கல்லை கடத்துங்கள், நில அபகரிப்பில் ஈடுபடுங்கள். ஆக, கட்சி நிதி மட்டும் மறக்காமல் கட்டிவிடுங்கள். ஆக, நீங்கள் அனைவருமே நிதி மந்திரிகள் தான்.
சுல்தான், நம் நாட்டின் நிதி நிலைமையே சரியில்லையே.
ஆக, அதற்காக தான் என் குடும்பத்தை சேர்ந்த ஒரு உயர்மட்ட குழு அமேரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து போதிய நிதியை பெற்று வருவது என்று முடிவு செய்து இருக்கிறேன்.
பிரேசில், அர்ஜென்டினா எதுக்கு சுல்தான்????
ஆக, அமேசான் மழைக்காடுகளில் வாழும் அனக்கொண்டா பாம்புகளை நாங்கள் பார்க்கவே கூடாதா???? ஆக, இந்த சந்தர்ப்பம் மீண்டும் அமையுமா என்று தெரியாது.
சரி சுல்தான், இந்த முதலீடு???
நமது குடும்பம் அங்கு முதலீடு செய்யும். பிறகு அவர்கள் அதே பணத்தை இங்கு முதலீடு செய்வார்கள்.
அப்படி என்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் சுல்தான்???
ஆக, நாங்கள் திரும்பி வரும் வரைக்கும், நமது முண்டகளப்பைகளிடம் சொல்லி, அரண்ட அமேரிக்கா, சுருண்ட அனக்கொண்டா, உருண்ட அர்ஜென்டினா, புரண்ட பிரேசில் காண்டான கனடா என்று ஏதாவது ஒரு தலைப்பில் உருட்டிக் கொண்டே இருங்கள்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...