Sunday, December 4, 2022

தேர்தலில் அள்ளிவீசுவதற்கென சம்பாதிக்கிறார்களோ?.

 *GSquare:* முதல்வர் மருமகன் திரு. சபரீசன் நடத்திவரும், ரியல் எஸ்டேட் கார்ப்பரேட் நிறுவனம்தான் இந்த GSquare. தற்சமயம் இந்நிறுவனம் ஒலியின் வேகத்தைவிட வேகமாக வளர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்த கவர்மெண்ட்டும் கட்டம் கட்டி இந்த GSquare நிறுவனத்திற்காக வேலை செய்து வருகிறது.
தினமலர் செய்தித்தாளில் வந்த செய்தியின் படி அரக்கோணத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
அங்கு ரயில்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் அதற்கான சைடிங் டிராக் வசதியுடன் இந்த தொழிற்பூங்கா அமைய உள்ளது. தேவையான எண்ணிக்கையில் துணை மின் நிலையங்கள், குடிநீர் வசதி, சாலை, வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையும் பெறுவதற்கான கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன. கூடுதலாக ஹெலிபேடு வசதியும் இந்த தொழில் பூங்காவில் ஏற்படுத்தப்பட உள்ளது.
*ஒரு மாநில அரசாங்கம் செய்ய வேண்டிய கட்டமைப்பை ஒரு தனியார் நிறுவனம் அதாவது முதல்வரின் மருமகன் நடத்தும் இந்த கார்ப்பரேட் நிறுவனம் தன் கைவசப்படுத்தியுள்ளது.*
இந்த GSquare நிறுவனம் கடந்த 10 மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மட்டும் சுமார் 2000 பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளை விற்றுத் தீர்த்துள்ளது,
ஒரு மனையின் குறைந்தபட்ச விலை 1.25 கோடிகளில் ஆரம்பிக்கிறது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த 10 மாதங்களில் மட்டும் இந்நிறுவனம் சென்னையைச் சுற்றி சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் நிலப்பரப்பின் அளவு மட்டும் சுமார் 10 அண்ணா நகருக்கு சமமானது.
இதுபோக பெங்களூர் செல்லும் சாலையில் பலநூறு ஏக்கர்கள், கோவை பாலக்காட்டில் சுமார் 200 ஏக்கரில், திருப்பூர், திருச்சி போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு மனை பிரிவுகள் விற்பனை செய்து வருகின்றனர். இதன் மதிப்புகள் குறைந்தபட்சம் சுமார் 20 முதல் 30 ஆயிரம் கோடிகள் வரை சென்னை தவிர்த்து.
சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்த செய்தி: சென்னை அண்ணாசாலையில் ஒரு பெரிய நிறுவனத்தின் இடத்தை ஒட்டுமொத்தமாக விலை பேசி வாங்கி விட்டனர்.
இப்பொழுது அரக்கோணத்தில் 400 ஏக்கரில் தொழில் பூங்கா. 400 ஏக்கர் என்பது சுமார் 7200 பிளாட்டுகள். கோரோன வைரஸ் ஐ விட வேகமான (பரவல்) வளர்ச்சியல்லவா இது?.
இந்த வளர்ச்சியை எதனுடன் ஒப்பிடலாம் என்றால் SIPCOT or SEZ(special economic zone). இந்தத் துறை கூட இதுவரை சுமார் 50 ஆண்டு காலத்தில் வெறும் 30 ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே தொழில் பூங்காவாக உருவாக்கியுள்ளது
இந்த 400 ஏக்கர் தொழிற்பூங்கா அமைவதற்காக தமிழ்நாடு அரசாங்கம் அதைச் சுற்றிலும் மக்களின் வரிப்பணத்தில்
அருமையான
சாலைகளையும், மின் விளக்குகளையும், குடிநீர் இணைப்பு களையும், துணை மின் நிலையம் போன்றவைகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும்.
வருவாய் துறை, கோட்ட பொறியாளர் துறை, மின்சார வாரியம், மாநில நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வாரியம், பத்திரப்பதிவுத்துறை என சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிர்வாகமும் இரவு பகல் பாராது மின்னல் வேகத்தில் இந்த 400 ஏக்கரை மேம் படுத்துவார்கள். ஆனால் லாபம் அத்தனையும் இந்த GSquare நிறுவனத்திற்கு.
ஒரு மாநில அமைச்சரவை கேபினட் மீட்டிங்கில் ஒப்புதல் பெற்று தொழில் பூங்கா அமைப்பதற்கு சட்டசபையில் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்; அதற்கு ஏகப்பட்ட தடங்கல்கள் வரும்; கிராம மக்கள் நீதிமன்றத்திற்கு செல்வார்கள், பலர் தங்கள் நிலங்களை கொடுக்க முன்வர மாட்டார்கள்
இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு SIPCOT அமைவதற்கு சுமார் 5 முதல் 6 ஆண்டுகள் காலம் பிடிக்கும். ஆனால் ஒரு தனியார் நிறுவனம் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி எல்லாத் துறையையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து மக்களுடைய வரிப்பணத்தில் உள்கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து அனைத்து லாபங்களையும் தன் வயிற்றுக்குள் திணித்து கொள்கின்றது.
சுமார் 2 ஏக்கர் வைத்திருக்கும் ஒரு நில உரிமையாளர் அதை பராமரிக்க முடியவில்லை என்று கருதி குடியிருப்பு மனைகளாக பிரிப்பதற்கு ஒப்புதல் வாங்குவதற்கு மட்டும் நாயாக, பேயாக அலைந்து, கவுன்சிலர் முதல் அதிகாரிகள் வரை வாயில் போடவேண்டியதை போட்டு (சுமார் 10 சதவீத லஞ்சத்திற்கு பிறகும் ) 15 முதல்18 மாதங்கள் கழித்தே அவருக்கு அனுமதி வழங்கப்படும். இதில் சிறுத்தை குட்டிகள், பெருத்த குட்டிகள், அம்பேத்கரின் பேரன் மார்கள் எல்லோரிடமும் அனுமதி பெற (வாய்க்கு அரிசி) வேண்டும்.
1990களின் இறுதியிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை மாறன் பிரதர்ஸ் தனியார் தொலைக்காட்சி, எஃப்எம் வானொலி, செய்தித்தாள்கள் மற்றும் ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்த விமானத் தொழிலை கூட மாறன் பிரதர்ஸ் லவட்டிக்கொண்டார்கள்.
அதற்குப்பின் பள்ளிக்கூட படிப்பில் 99.99% மதிப்பெண்கள் ஆ.ராசாவை யும், கனிமொழியையும் பிராமணர்கள் பிரம்பை வைத்து கல்லூரியில் நுழைய விடாமல் செய்துவிட்டார்கள். இதற்கு பதிலடி கொடுத்து இழந்த வாய்ப்புகளை திரும்ப சம்பாதித்து சமூக நீதியை நிலைநாட்ட 2005-ல் இருந்து 2013 வரை 2ஜி அலைக்கற்றையை கையில் எடுத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் குபேரன்களாக ஆக்கினார்கள்.
அதே காலத்தில் உதயநிதியும், துரை தயாநிதியும் அன்றைய சினிமா துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்தனர்.
இன்று இந்த GSquare நிறுவனம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் கூறுபோட்டு குடியிருப்பு மனைகள் தொழில் பூங்காக்கள் என்ற பெயரில் வேகமாக விற்பனை செய்து எல்லோரையும் அழித்து விட்டு தன் வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்கின்றனர்.
ஒரு நில உரிமையாளர் தன்னுடைய நிலத்தை சர்வே செய்வதற்கு தாசில்தார் அலுவலகத்தை அணுகி தன்னுடைய நிலத்தை அளக்க வேண்டும் என்று மனு சமர்ப்பித்தால் குறைந்தபட்சம் 30 முதல் 40 நாட்கள் கழித்துதான் சர்வேயர் என்பவர் நிலத்தை அளக்க வருவார்,
அதன் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டர், அதன்பிறகு துணை தாசில்தார், அதன்பிறகு தாசில்தார் அதன்பிறகு ஆர்டிஓ, சில குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் வட்டாட்சியர், CMDA வாக இருந்தால் Member secretary, அதற்குமேல் அமைச்சர் இப்படி இத்தனை துறைகளை தாண்டித்தான் ஒருவர் மூன்று அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தை மனை உட்பிரிவு பெறமுடியும். இருந்தும்அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே 18 மாதங்கள் பிடிக்கும்.
ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் அனைவருக்கும் இந்த குட்டி தெய்வங்கள் உபதெய்வங்களுக்கு செய்யவேண்டிய நைவேத்திய முறைகள் அத்துப் படியாக இருக்கும்.
ஆனால் இந்த GSquare நிறுவனம் காலங்காலமாக ரியல் எஸ்டேட் செய்துவருபவர்களை சின்ன பிள்ளைகள் ஆக்கிவிட்டது. இந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் மனைப்பிரிவு GSquare செய்து முடித்திருக்கிறது.
நமது இதிகாசங்களில் ராட்சசர்கள் கூட அடாவடியாக எடுத்துத் தின்று வயிறு நிரம்பியவுடன் வயிற்றுப் பகுதியை தடவி புன்னகை பூத்து மகிழ்ச்சி அடைந்து ஏப்பம் விட்ட காட்சி பல திரைப்படங்களில் வந்துள்ளது. ஆனால் இந்த ராட்சசர்களுக்கு எப்பொழுது தான் வயிறு நிரம்பும் என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த ரியல் எஸ்டேட் துறை ஒட்டுமொத்தமாக இந்த GSquare நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. எதிர்க்கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள், மனைகளில் கைவைத்தவர்கள் தற்போது உடன்பிறப்புகளின் நிலங்கள், மனைகளுக்கும் வலைவிரிக்கிறார்கள். திரைத்துறையினர் உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டே வேறு வழியில்லாமல் இவர்களிடம் விநியோகத்தை ஒப்படைப்பதை போல, ரியல் எஸ்டேட் செய்து வந்த உடன்பிறப்புகள், GSquare அந்த பகுதியில் வந்துவிட்டது என்றவுடன் தெறித்து ஓடுகின்றனர்.
இந்த GSquare நிறுவனத்தின் அசுரப்பசிக்கு நிலத்தை, மனையை குறைந்த விலைக்கு விற்ற உடன் பிறப்புகளின் எண்ணிக்கை பெருகத்தொடங்கி விட்டது.
விஞ்ஞான ஊழல்களின் தந்தை என அன்புடன் அழைக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தற்போது அடைந்துவரும் வளர்ச்சியை, வெறும் நிர்வாக ஊழல், என பேசிக்கொண்டே இருந்தால், இரண்டாம் மன்னர் வகையறா நிதி, மூன்றாம் மன்னர் வகையறா நிதி, நான்காம் மன்னர் வகையறா நிதி, ஐந்தாம் மன்னர் வகையறா நிதிகள் என அவர்களுடைய வாரிசுகளாக வந்து இன்னும் 500 ஆண்டுகாலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வருமான வரித்துறையினர் ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சியையும் அதன் வரி கட்டும் விகிதத்தையும் தொடர்ச்சியாக கண்காணிப்பார்கள் அதனுடைய வளர்ச்சி விகிதம் நடைமுறைக்கு முரணாக இருந்தால் நிச்சயமாக அந்த நிர்வாகத்தின் உண்மைத்தன்மையை அறிய முற்படுவார்கள்.
ஆனால் இந்த நிறுவனம் சில ஆண்டுகள் கூட ஆகவில்லை ஆனால் அதன் வளர்ச்சி பல ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளது. ஒரு 2ஜி அலைக்கற்றை ஊழலில் 213 கோடி ரூபாய் முறையற்ற பரிவர்த்தனை வைத்து ED (Enforcement department) 2011 ஆம் ஆண்டு கருணாநிதி குடும்பத்தை உலுக்கி எடுத்தது.
ஆனால் இந்த *GSquare* நிறுவனம் அடைந்த அபரிமிதமான வளர்ச்சியை துளியும் கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்க்கும் பொழுது மத்திய அரசும் இவர்களுக்கு துணை போகின்றனரோ என்று தான் தோன்றுகிறது.
ஒருவேளை எப்படியும் ED விசாரணை வரத்தான் போகிறது, 2 ஆயிரம் கோடிகள் சம்பாதித்திருந்தாலும் 2 லட்சம் கொடிகள் சம்பாதித்திருந்தாலும் ஒரே விசாரணைதானே, என பகுத்தறிவாளர்கள் பெரிதாக செய்கிறார்களோ?.
எப்படியும் தேர்தலில் வென்றுவிட்டால் அனைத்து வழக்கு விசாரணைகளையும் சமாளித்து விடலாம், அதனால் தேர்தலில் அள்ளிவீசுவதற்கென சம்பாதிக்கிறார்களோ?.
எப்படியோ நல்லவேளை இவர்கள் குடும்பத்தில் எவருக்கும் ஆழ்ந்த கலை அறிவியல் தொழில்நுட்ப அறிவு கிடையாது. அதனால் குறைந்த படிப்பறிவு தேவைப்படும் புரோக்கர், விநியோகம், கட்டப் பஞ்சாயத்து போன்ற துறைகளில் மட்டும் சம்பாதிக்கிறார்கள்.
ஒருவேளை இவர்களுக்கு Elon Musk, Adani, James கேமரூன் போல அறிவியல், நிர்வாக, கலை திறமை இருந்திருந்தால், மொத்த உலகத்தையும் சுரண்டி எடுத்து, வரலாற்றை திருத்தி.. அப்பப்பா நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களின் எல்லா நகரங்களிலும் பரவியுள்ளது. பெங்களூருவில் கூட அலுவலகங்கள் . தமிழகத்தின் மொத்தப் பகுதியும் அவர்கள் வசம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...