ஆம் ஆத்மி வெல்லும் இடங்களில் பாஜக வாக்கு ஏறக்குறைய அப்படியேதான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் சுத்தமாக அழிந்து போகிறது. பிராந்தியக் கட்சியாகக் சுருங்கிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்களும் ஆம் ஆத்மி வெல்லும் இடங்களில் மொத்தமாக அழிந்து விட்டதைக் காணலாம்.
ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆம் ஆத்மியை ஓரளவுக்கு மேல் எதிர்ப்பதில்லை. ஆம் அத்மியின் ஊழல்கல் வெளியே வந்தாலும் அதுபற்றிப் பேசுவதில்லை.
ஆம் ஆத்மியின் வளர்ச்சி தங்கள் அழிவு என்ற சாதாரண உண்மையைக் கூட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிக்கத் தவறுகின்றன. தமிழ் டிவி விவாதங்களில் இக்கட்சிகளின் மகிழ்ச்சியைப் பார்த்தால் அந்த மகிழ்ச்சி பாஜ்க வின் தோல்வியா? அல்லது அவர்களின் அழிவா? என்று நகைக்கத் தோன்றுகிறது.
தனக்கு இரு கண்கள் போனாலும் பாஜகவிற்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற நிலைப்பாடு.. 2024 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைத் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம். அவ்வளவு தூரத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் வெறுத்துப் போய்க்கிடக்கிறார்கள் திக கட்சிகளைப் பார்த்து.
No comments:
Post a Comment