இன்றைய சூழ்நிலையில் ஒரு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதிலும் மனதிற்கு பிடித்த வேலை, எதிர்பார்த்த பதவியில், எதிர்பார்த்த சம்பளத்தில் கிடைப்பது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல், மனதிற்கு பிடிக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்வார்கள். யாரையும் குறை சொல்லி விட முடியாது. அவரவர் சூழ்நிலை, அவரவர் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு எப்பாடுபட்டாவது சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே அதை நாம் பாராட்ட வேண்டும். உங்களுக்கு வேலையே இல்லை புதுசாக ஏதாவது ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இருக்கின்ற வேலையில் இருந்து நல்ல வேலைக்கு மாற வேண்டும் உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கை மேல் பலன் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்க வர மிளகாய் பரிகாரம்: காலை 6 மணி அளவில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் வர மிளகாய் 3 எடுத்துக் கொள்ள வேண்டும். காம்பு உடையாத மிளகாய் தேவை. மிளகாய் உடைந்து இருக்கக் கூடாது. முழு குண்டு வர மிளகாய், முழு நீளமான வரமிளகாய் உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அதை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளலாம் அல்லது நின்றும் செய்யலாம். உங்கள் சௌகரியம். வலது கையில் மூன்று வர மிளகாய்களை வைத்து, அப்படியே வலது கையை உச்சம் தலையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி வேலை கிடைக்க வேண்டும். அதை மனதார சொல்லி, அந்த வேலை உங்களுக்கு நல்லபடியாக கிடைத்து விட்டது. நீங்கள் அந்த வேலைக்கு போவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லது நடந்து விட்டது. நீங்கள் விரும்பிய வேலை கிடைத்துவிட்டது. முதல் மாதம் சம்பளம் வாங்கி விட்டீர்கள். இப்படி நல்ல விதமாக எவ்வளவு தூரம் கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் கற்பனை செய்து மனதார அந்த வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரண்டு நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் இந்த வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைக்கலாம். ஆனால் உள்ளங்கையில் வர மிளகாய் இருக்க வேண்டும். அந்த உள்ளங்கை உச்சந்தலையில் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்தது அப்படியே நிஜத்தில் நடக்கும். ஆனால் ஒருநாள் செய்துவிட்டு இந்த பரிகாரத்தை விடக்கூடாது. தொடர்ந்து இதே போல ஒரு கோரிக்கையை 48 நாட்கள் செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு கையில் இருக்கும் வரமிளகாயை கால் படாத இடத்தில் போட்டு விடலாம். 48 நாட்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து செய்யலாம். ஏனென்றால் இதில் பூஜை அறைக்கு வேலை கிடையாது. இந்த பரிகாரம் செய்ய மாதவிடாய் நாட்கள் தடை இல்லவே இல்லை. ஒரு நாள் கூட மிஸ் பண்ணாதீங்க 48 நாட்கள் இந்த வேண்டுதலை மேற்கொண்டால், வேலையை கிடைக்க விடாமல் தடை செய்யும் எதிர்மறை ஆற்றலை, எதிர்மறை சக்தியை இந்த வர மிளகாய் உடைத்து விடும். பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் வேலை கிடைத்துவிட்டால் கூட பரிகாரத்தை நிறுத்தாதீங்க. 48 நாட்கள் தொடர்ந்து செய்து முடித்து விட வேண்டும். பரிகாரத்தை செய்து முடித்தும் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். சில பேருடைய கிரகச்சாரம் பரிகாரத்திற்கான பலனை உடனே கொடுக்காது. கூடிய சீக்கிரத்தில் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். 48 நாட்கள் பிறகு பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
No comments:
Post a Comment