ஒரு விவாகரத்து நடந்தபின் ஆண் நெஞ்சை விடைத்துக்கொண்டு அலையுமளவிற்கு பெண்ணால் நிமிர்ந்து கூட செல்லமுடியாது .
அப்பர் மிடில் க்ளாஸ் கூட பரவாயில்லை .
லோயர் மிடில் கிளாஸ் மிக மோசம்.
பழைய வாழ்க்கையை குத்திக்காட்டாமலும்
,தான் ஒரு மகான் போல,தியாகி போல காண்பிக்காத
பெரிய மனதுடைய மணமகனும் கிடைக்கவேண்டும் .
இல்லையெனில்
இது தெரிந்த விவரமறிந்த மைனர் குஞ்செல்லாம் குண்டு போட்டு சுற்ற ஆரம்பிக்கும் .
வேலைக்கு செல்லுமிடங்களில் சூப்பர்வைசர் இடங்களில் சில நரிகள் கடித்துகுதற காத்திருக்கும் .
கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியம் அதிகமாகும் .
இதற்கு பதில் அந்த பெண்ணை கொன்று போட்டிருக்கலாம் .
கணவனை இழந்த பெண்களையே இன்னும் சரிவர அங்கீகரிக்காத மக்கள் இருக்கும் சமூகத்தில்
,விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் ஆறுதலளித்து அரவணைக்க இன்னும் மனம் வரவில்லை .
கேலிப்பொருள்களாகவே பார்க்கப்படுகின்றார்கள் .
No comments:
Post a Comment