கலைஞர் தனக்கு என்று ஒற்றைப்பைசா கூட சொத்து சேர்க்காமல், தன் வாரிசுகளுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல், பொதுநலத் தியாகியாக வாழ்ந்தார்!
காமராசர் கோடிக் கணக்கில் சொத்துக்களைக் குவித்து, தனது தாயார் வழி நாடார் உறவினர்களை பினாமி ஆக்கி தன் சாதிமக்கள் பலரை சிவகாசியிலும், விருதுநகரிலும் செழிக்க வைத்தார்!
இன்று விருதுநகரிலும், சிவகாசியிலும் உள்ள பல நாடார் தொழிலதிபர்கள் காமராசரின் பினாமிகளாக ஆரம்பத்தில் இருந்து பின்னர் செழித்தவர்கள்தான்!
ராஜாஜி அடித்த கொள்ளை கொஞ்ச நஞ்சமல்ல! அவருடைய நெருங்கிய சதாசிவம் மூலம் - அவரது மனைவி எம்.எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்து வந்த பணமாக கணக்குக் காட்டினார்.
தனது மகன் சி.ஆர்.நரசிம்மனை பதினேழு நாடுகளுக்கு ரகசியத் தூதராக நியமித்தவர் ராஜாஜி!
ஆனால் கலைஞர் அப்படி அல்ல...
தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு இந்த மூன்றுக்காகவும் தன்னையே சந்தனமாகத் தேய்த்து, சல்லிக்காசு கூடச் சேர்க்காத அரும் பெரும் தியாகி!
(நம்பறோம் சார்! - இப்படிக்கு...
சில கல்லூரிப் பேராசிரியர்கள், பேராசிரியைகள்.
பல அரசு ஊழியர் - ஊழியைகள்,
பலப்பல ஆசிரிய, ஆசிரியைகள்,
மிகப்பல 'படிக்கட்டு க்ராப்' - ஒற்றைக் கடுக்கன் இளவட்டங்கள்!)
No comments:
Post a Comment