தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி ஆகியோர், கைது செய்யப்பட்டுவீட்டுக் காலவில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா மீது, பொது பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை, ஓராண்டு வரை சிறையிலோ அல்லது தடுப்புக் காவலிலோ விசாரணையின்றி வைக்க முடியும். இந்நிலையில், ஒமர்அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அவர்கள் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது; இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இருவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து,அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கடந்த ஜூலையில், தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டம்நடந்தது. அப்போது, ஒமர் அப்துல்லா, 'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அதற்கு எதிராக போராட்டம் நடத்த இளைஞர்களை திரட்ட வேண்டும்' என,கூறியிருந்தார். ஒமர் அப்துல்லா, முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை துாண்டும் வகையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதனால், நாட்டுக்கு எதிராக, இளைஞர்களை, அவர் திரட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மெஹபூபா முப்தி, தடை செய்யப்பட்ட, ஜமாத் - இ - இஸ்லாமியா அமைப்பினருக்குதொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அந்த பிராந்தியம் இந்தியாவுடன் இருக்காது என்பது போல், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக பேசி வந்தார். இதன் காரணமாகவே, இவர்கள் இருவர் மீதும், பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment