🍁யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.🍁
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.🍁
🍁சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா? இயற்கை ஒருபோதும் உன்னை புறக்கணிப்பதில்லை🍁
🍁உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய். அது மனதின் வேலை.🍁
🍁உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னை புறக்கணிப்பதுண்டு. எத்தனையோ மனிதர்களை நீயும் புறக்கணிக்கிறாய்🍁
🍁எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியை தருவதில்லை. சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.🍁
🍁சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறது.🍁
🍁கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. இது மனதின் உயர்வு-தாழ்வு மனப்பான்மையினால் விளைவது. 🍁
🍁அதனால் பிறரை உயர்வாக கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.
பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.🍁
பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.🍁
🍁உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.🍁
உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.🍁
🍁இவையனைத்தும் உன் மனதின் கற்பனை நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.🍁
🍁ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை. தியானம் செய். இயற்கையை நேசி.
வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.🍁
வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.🍁
🍁இது இயல்பே என எண்ணு. வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை🍁
🍁அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.
No comments:
Post a Comment