Tuesday, January 5, 2021

சைவ வேட சாத்தான்.

 ஒரு பத்திரிகையாளரின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல , துப்பில்லை , திராணி இல்லை என்று சொன்னால் , அதற்காக அவர் நகையைத் திருடி விட்டார் என்று சொல்லுவதெல்லாம் அசிங்கத்தின் உச்சம்!

என்று திருந்துமோ இந்த ஈனப் பிறவிகள் ?!
உங்களுக்கு எதிராக கேள்வி கேட்க ஒரு ஊடகமும் இல்லை என்கின்ற தைரியத்தில்தான் நீங்களெல்லாம் அறிவாளி பிம்பத்தோடு அலைகிறீர்கள்?!
ஆனால், என்னைப் போன்ற, எங்களைப் போன்ற இந்துத்துவ சித்தாந்தத்தில் பயணிப்பவர்கள், தினந்தோறும் எதிர் கேள்விகளை மட்டுமே சந்தித்து களமாடி வருகிறோம். ஆனால், ஒருபோதும் உங்களை போன்று நகை திருடி விட்டார்! செருப்பை திருடிக்கொண்டு ஓடி விட்டார் என்றெல்லாம் , நயவஞ்சக சாக்கு சொல்லி ஏமாற்ற எண்ணியதில்லை!
வழுவழு பாதையில் கொழுகொழு வென வளர்ந்து , கேள்வி கேட்க யாரும் இல்லாமல் தறிகெட்டு வளர்ந்திருக்கும் அன்னிய நாட்டு சித்தாந்தவாதிகள் போல் அல்ல, இந்திய சித்தாந்தவாதிகள் !
கரடுமுரடான காட்டுப்பாதையில் , சுற்றியும் நயவஞ்சக நரிகளும் திருட்டு ஓநாய்களும் , ஓயாமல் ஓலமிடும் கோட்டான்களும் இருக்கும் நிலையிலும் , எதற்கும் ஆசைப்படாமல் , இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையிலும் தர்மம் தலை தூக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக சமரசமின்றி போராடுபவன் தான் இந்துத்துவாதி !
ஒரே ஒருவன் வந்து, ஒரே ஒரு நியாமான கேள்வி கேட்டதற்கே, ஓலமிட்டு ஒப்பாரி வைக்கும் ஞான சூனியங்களுக்கு இதெல்லாம் புரியவா போகிறது?!
By the way , good job Madan Ravi Chandran ,
அந்த திருட்டு நரியின் பித்தலாட்டத்தை தோல் உரித்து , அதை ஊளையிட வைத்ததற்கு என் பாராட்டுக்கள் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...