ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது.
ஸ்டெர்லைட் ஆலையை இடித்து தரைமட்டமாக்கிய பின் அந்த இடத்தில் மருத்துவமனை கட்டப்படும்.
இனிமேல் அனைத்து வட நாட்டு தொழிலாளர்களும் அவங்கவங்க மாநிலத்திற்கு போய் விடுவார்கள்.
சவுகார்பேட்டை முழுவதும் தமிழர்கள் குடி அமர்த்தபடுவார்கள். ஒரு மார்வாடி கடையை கூட இனி தமிழ் மண்ணில் பார்க்கவே முடியாது.
நாளைக்கு சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன் முழுக்க ராஜஸ்தான் திரும்பி போக மூட்டை முடிசுடன் மார்வாடி கூட்டம் கூட்டமாக ரயிலுக்காக காத்திருப்பார்கள்.
கேஸ் சிலிண்டர் 100 ரூபாய்க்கு வந்துவிடும்.
சிலிண்டர் போடும் ஆளிடம் நீங்களாகவே காசு கொடுத்தால் கூட அய்யோ ஸ்டாலினுக்கு தெரிந்தால் என் வேலையே போய்விடும் என்று ஓடி விடுவார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய் குறைக்கப்படும். பெட்ரோல் மாநில வரி முழுவதும் நீக்கப்படும்.
நீட் தேர்வு இருக்காது.
அக்கா கனிமொழி கொடுத்த.... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக நடத்தும் மது ஆலை கள் முடப் படும் என்ற அந்த வாக்குறுதி நிறை வேற்ற ஸ்டாலின் கை எழுத்து போட்டு முதல் அமைச்சர் ஆனதும் அனைத்து மது ஆலைகளும் மூடப்படும்.
குறைந்த பட்சம் 50 அணைகள் கட்டப்படும்.
அம்பானி, அதானி குடும்பம் தமிழ்நாட்டில் ஒரு குண்டூசி கூட இனிமேல் விற்கவே முடியாது.
ஜியோ பைபர், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் அனைத்தும் மூடப்படும்.
சத்தியமாக தமிழ் மண்ணில் இருந்து அம்பானி கார்ப்பரேட் ஒரு பைசா கூட எடுத்து செல்ல முடியாது.
தமிழ்நாட்டில் இருக்கும் கார்ப்பரேட் காம்பெனிகள் அனைத்தும் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும்.
இனிமே எந்த நெடுஞ்சாலையும் விரிவாக்கம் செய்யவே முடியாது.
விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.... அதனால் அனைத்து சாலைகளும் இனி திமுக ஆட்சியில் இருக்கும் வரை அப்படியே இருக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடி குடும்பங்களில் ஒவ்வொருத்தரும் அரசாங்க வேலையில் மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு வேலை கிடைத்து விடும்.
நாளையில் இருந்து சாதி சர்டிபிகேட் எந்த இடத்திலும் கேட்க மாட்டார்கள்.
சமத்துவ தமிழ்நாடு அதாவது யார் எந்த ஜாதி என்பதே இனி தெரியாது அந்த அளவுக்கு சமத்துவ தமிழ்நாடு ஆகி விடும்.
நாளை முதல் டாஸ்மாக் மூடப்பட்டு அடுத்த 100 நாட்களில் தமிழ் மக்களுக்கு சாராயம் என்ற வார்த்தையே மறந்து போய் இருக்கும்.
தனியார் பள்ளி கூடங்களுக்கு இனிமேல் 1 லட்சம் கட்டணம் இருக்காது.
அரசு பள்ளிக் கூட கட்டணம் போலவே தனியாரும் வாங்க சட்டம் வந்து விடும்.
தஞ்சை டெல்டா பகுதிகளில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ONGC பெட்ரோல் கிணறுகள் மூடப்பட்டு விடும்.
நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது
No comments:
Post a Comment