Thursday, June 3, 2021

தமிழ் பாட்டி வைத்தியம்.

 நீண்ட தூரங்களுக்கு இட்லி செய்து கொண்டு செல்லும் போது காய்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நீண்ட தூர பயணத்துக்கு சரியான ஒரு உணவு நம்ம இட்லி தான், நம்ம சிற்றுண்டிகளின் ராணி கொஞ்சம் காய்ந்து போன கொஞ்சம் கடுப்பா தான் இருக்கும் நம்மளுக்கு.
நான் பெரும்பாலும் ஒரு பகல் நேர பயண விரும்பி, ஸ்லீப்பர்ல பகல் நேரத்துல புத்தகம் படிச்சிட்டே போறது ஒரு அலாதியான ஒரு அனுபவம். காலைல அம்மா குடுத்த இட்லிய பிச்சு போட்டு சாம்பார்ல முக்கி சாப்பிட்டு பஸ் ஏறி படிச்சிட்டே உச்சி வெயில் வரும்பொழுது கபகபனு பசி எடுக்க ஆரம்பிச்சிடும். அப்போ தான் வீட்டுல கட்டி குடுத்த இட்லிய சும்மா ஒரு பிடி பிடிப்பேன்.
3 கப் புழுங்கல் அரிசிக்கு ஒரு கப் உளுந்து போட்டு நல்லா ஆட்டி சும்மா சூப்பரா நொதிக்க விடணும், அப்போ தான் இட்லி சும்மா பஞ்சு மாதிரி வரும், வீட்டுலயே அரைச்ச இட்லி பொடில நல்லெண்ணெய் விட்டு கலக்கி தனியா ஒரு கிண்ணத்துல எடுத்துக்கணும்.
நல்ல ஒரு இரும்பு தோசை கல் ல அடுப்புல வெச்சு சூடு ஏத்தி அப்டியே இட்லிய எடுத்து கலந்து வெச்சு இருக்க பொடில ரெண்டு பக்கமும் புரட்டி எடுத்து தோசை கல்லுல போடுங்க கொஞ்சம் நேரத்துல பொடி ஓட கார நெடி மூக்குல ஏறும், அப்போ எடுங்க இட்லிய. அப்டியே ஒரு நாலு இட்லி இதே மாதிரி பொடில பொரட்டி தோசை கல்லுல போட்டு எடுத்து இளம் வாழை இலைல போட்டு கொஞ்சம் மேலாப்புலா நெய் ஊத்தி கட்டிடுங்க.
இட்லி வெறும் இட்லி யா எடுத்துட்டு போகாம இது மாதிரி செஞ்சு எடுத்துட்டு போனா இட்லி காய்ந்து போய்டும்ன்ற கவலையே வேணாம், சட்னி & சாம்பார்னு எந்த சைடு டிஷ்ம் சுமக்க வேணாம். குழந்தைங்களும் விரும்பி சாப்பிடுவாங்க, இதே மாதிரி இட்லி பொடிக்கு பதிலா வெல்லமும் பொடி செஞ்சு பண்ணலாம், இனிப்பு இட்லி ரெடி, வெல்லம் உணவுல சேர்த்துக்குறது உடலுக்கு நல்லதும் கூட.
4 - 6 மணி நேரம் மேல ஆனாலும் காயம இருக்கும், சொல்ல போன நேரம் ஆக ஆக இட்லி பொடி ஓட ஊறி மேல ஊத்தின நெய் ஓட கலந்து வாழை இழை ஓட பச்சையமும் கலந்து ஒரு தரமான ருசி குடுக்கும் அது வேற லெவல்ங்க . இது மாதிரி கட்டிட்டு போய் சாப்பிடுங்க, நன்றி மக்களே சுவைத்து மகிழவும் !!
May be an image of croquette and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...