ஸ்வீட்களுக்குள்.. லட்டுதான் காஸ்ட்லி.. பண்ணும் பாடும் அதிகம்.. நான் சொல்லவில்லை..
பிரபல சமையற்கலைஞர்.. இப்போது கல்யாணங்கள் இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி இருப்பவர் ஒருவர் கூறிய பொன்மொழி..
அது வெறும் ஸ்வீட் மட்டும் அல்ல.. முந்திரி.. ஏலம்.. திராட்டை ,லவங்கம் ஆகியவை சேர்ப்பதால் உடல் நலத்திற்கு மருந்தாம்...
அந்தக் கால கல்யாணங்களில் முகூர்த்தத்திற்கு லட்டுதான் போடுவார்கள்.. அப்போதெல்லாம்.. இப்போது போடுவது போல.. பாதுஷா.. குலோப் ஜாமூன் ஆகியவை போட மாட்டார்கள்.. மாப்பிள்ளை அழைப்பிற்கு மைசூர்பாகு.. முகூர்த்தத்திற்கு லட்டு..இரவு பூபந்திக்கு ஜிலேபி..
இப்போது அந்தக் காலத்து லட்டு போய்.. வடஇந்திய லட்டுதான் அதில் ஏலம் போன்ற பொருட்கள் இருக்காது.... யாராவது ஜெயித்தாலும்.. சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வரும்போதும்.. போவோர் வருவோருக்கு எல்லாம் கொடுக்கப் படுகிறது.
அந்தக் கால கல்யாணங்களில் சீர் லட்டு என்று பெரிசு பெரிசாக.. ஈயம் பூசிய பித்தளை டிரம்களில் போட்டு.. மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பார்கள்..
அவர்கள் தானே தின்று விடலாம் என்ற நம்பிக்கையில் யாருக்கும் தராமல்.. சில நாட்களில் பூஞ்சை பிடிக்க வைத்து விடுவார்கள்.. பின் அதை நாயுக்கு போட.. அதை தின்ற தெருநாய்கள்.. முனிசிபாலிடிகாரன் பிடிக்காமலேயே அந்த ஏரியாவை விட்டு ஓடிவிடும்..
லட்டு..ஆமாம்.. பிடிக்க வந்தால் லட்டு.. பிடிபடாவிட்டால் பூந்தி..
இப்போதெல்லாம் சுகர் பலருக்கு இருப்பதால் லட்டைப் பார்த்தாலே ஓடுகிறார்கள்.. பாவம் .. ஒரு காலத்தில் ஓகோ என்று வாழ்ந்த பண்டம்.. இப்போது சீநதுவாரற்று போயிற்று..
லட்டுக்கு அடைக்கலம் தந்தவர்.. நம்ம திருப்பதி பாலாஜிதான்.. வெங்காய பஜ்ஜியையும்.. திருப்பதி லட்டையும் வேண்டாம் என்று சொன்னவர் சரித்திரத்தில் இல்லை.. ஒரு வேளை பூகோளத்தில் இருக்கலாம்..
பெங்களுரில் உத்தம் சாகர் என்ற ஓட்டல்.. அதில் பெரிய பெரிய லட்டு.. ஒன்று 200 ரூபாய்.. அசல் திருப்பதி லட்டு டேஸ்ட் இருக்கும்.. நான் வாங்கியிருக்கிறேன்..
இங்கும் ஸ்பெஷல் லட்டு என்று ஒரு கேட்டகிரி.. பெரிய ஸ்வீட் கடைகளில் கிடைக்கிறது. கொஞ்சம் பிரவுன் கலரில் இருக்கும்... அசல் திருப்பதி லட்டு போலவே சுவையாக இருக்கும்.. வாங்கி வந்து.. வீட்டில் ஏழுமலையான் படத்தின் அருகே வைத்து வழிபட்டு.. சாபபிட்டால்.. அதே சுவை கிடைக்கும்..
எப்படியோ..நாம்.. நமது பாரம்பர்ய ஸ்வீட்டான தென்னிந்திய லட்டை காப்பாற்றுவோம்..
No comments:
Post a Comment