கலைஞர் ஆக சிறந்த அறிவாளி என்பதனை எதிர்தரப்பு உட்பட எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்..
எப்படி என்றால்
எம்ஜியார் முதற்கொண்டு எல்லோரும் சொல்லுவது
கலைஞர் ஒரு ஊழல்வாதி..
ஆனால் இன்று வரை அவரை யாராலும் நீதியின் முன் நிறுத்தி அவருக்கு தண்டனை பெற்றுத் தரமுடியவில்லை...
அவரது ஊழல்கள் அகிலம் அறியும்..
ஆனால் சட்டத்தின் முன் யாராலும் அவரை நிறுத்த முடியாது.
எப்போது யார் கழுத்தை நெறிக்க வேண்டும்.
எப்படி காலில் விழுந்து ஆட்டத்தை கலைக்க வேண்டும் என்பதற்கான பல்கலைகழகமே கலைஞர்.
ஊழலுக்காக அவர் பெற்ற உட்சபட்ச தண்டனையே ஆட்சி அதிகாரத்தை சில காலத்திற்கு இழந்தது மட்டும் தான்.
அதனால் யோசித்தே அவர் அறிமுகம் செய்ததுதான் திருமங்கலம் ஃபார்முலா..
அதனை
எதிர்கட்சிக்கும் பழக வாய்ப்பளித்தார்.
போட்டி போட்டுக் கொண்டு ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் மக்களுக்கு மாரி மாரி ஓட்டிற்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தினார்கள்...
என்னையவா ஊழல்வாதி என்கிறீர்கள்.
இன்று மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஊழல்வாதிகள்தான் என்று இன்றுவரை கொக்கரிக்கதான் செய்கிறார் கலைஞர்...
விளைவு
இன்று எந்த தமிழ் வாக்காளனுக்கும் ஊழல் என்பது ஒரு பொருட்டே இல்லை..
எந்த தமிழனை கேட்டாலும் சொல்லுவான்.
"யார் தான் திருடல"
இத்தகு சிந்தனை மாற்றத்தினை விதைத்தவர்..
No comments:
Post a Comment