காலையில் இருந்து மாலை வரை மண்வெட்டி பிடித்து வேலை செய்பவனுக்கு 700ரூபாய் சம்பளம் சரி.
10வரை படித்த அரசு வேலை பியூனுக்கு மாதம் 30000ரூபாய் சம்பளம் என்றால் தினசரி வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தினசரி 1000ரூபாய் சரி.
டிகிரி படித்த ஆபீஸருக்கு 60000ரூபாய் மாதசம்பளம் என்றாலும் தினசரி 2000ரூபாய் கூலி சரி.
பணத்தை முதலீடு செய்து நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த முதலாளியின் சம்பளம் எவ்வளவு இருந்தாலும் பிரச்னை இல்லை.
ஆனால் ஒரு படத்துக்கு 60கோடி சம்பளம் வாங்கும் நடிகரை என்ன சொல்வது?
ஒரு படத்திற்கு மிஞ்சி போனால் 60நாள் தான் கால்ஷீட்.
அப்படியென்றால் ஒரு நாளைக்கு ஒரு கோடியா?
பணம் என்பதின் மதிப்பு எதிலிருந்து கணக்கிட படுகிறது.
முதலில் சொன்ன உழைப்பாளிக்கு மேலும் 300ரூபாய் தேவைப்பட்டால் இரவும் சிறிது நேரம் உழைக்க வேண்டும்.
ஆனால் மறுநாள் அதே மண்வெட்டியுடன் வேலைக்காக காத்திருக்கிறான்.
ஆனால் ஒரு நடிகனோ வெறும் கையை காலை ஆட்டி நடித்து விட்டால் பெரிய அப்பாடக்கரா?
கலையை வளர்க்கிறானாம் இந்த லட்சணத்தில் நீட் தேர்வு பற்றி சூர்யா சொல்வதும் ஜிஎஸ்டி பற்றி விஜய் பேசுவதும் தான் ஆச்சரியம்.
இரண்டு பேருமே அப்பனை வைத்து சினிமா துறையில் காலூன்றியவர்கள்.
இவர்களுக்கும் திறமைக்கும் என்ன சம்மந்தம்?
No comments:
Post a Comment