Sunday, June 20, 2021

ஏன் மோடியை ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள், மறுசாரார் எதிர்க்கிறார்கள், வெறுக்கிறார்கள்? அவசியம் ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!

 அன்று டாக்டர் ஹெக்டே லண்டனில் ஒரு கான்பரன்ஸுக்கு போய்விட்டு இந்தியா திரும்புகிறார். அதே ஏர் இந்தியா விமானத்தில் மற்றொருவரும் கடைசி நேரத்தில் ஏறுகிறார். அவர் வேறு யாருமல்ல குஜராத்தின் முதல்வர் மோடி என்பதை அறிந்துகொள்கிறார் ஹெக்டே. பயணிகள் இல்லாத விமானத்தில் இவர்கள் இருவர் மட்டுமே! விமானம் கிளம்புகிறது. அந்த விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 10 மணி நேரம், கொஞ்ச நீண்ட பயணமே அது!

சிறிது நேரம் கழித்து மோடி எழுந்து சென்று விமான பணியாளர்களிடம் தண்ணீர் கேட்கிறார். அவர்கள் கொடுத்ததும் குடித்துவிட்டு கிளாஸை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்கிறார். பொதுவாக எதுவும் வேண்டுமானால் பெல் அமுக்கினால் விமான பணியாளர்கள் வந்து சேவகம் செய்வார்கள். அதுவும் முதல்வர் என்றால் ஓடி வந்து விழுந்து வேலை செய்வார்கள். அங்கே ஒரு அதிகாரம், ஆணவம் இருக்கும், ஆனால் அது போன்ற பந்தா என்று ஒன்று இல்லாமல் பணிவான போக்கு மோடியை என் மனதில் உயர்த்தி, நல்லெண்ணத்தை எனக்கு தோற்றுவித்தது.
சிறிது நேரம் சென்றது, மோடி எழுந்து என் அருகில வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டோம். நான் டாக்டெரென்று தெரிந்த பின்னால் அவர் குஜராத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து (MalNutrition) குறைவாக இருப்பதையும், அதனால் குழந்தைகள் இறப்பு அதிகமாக இருக்கிறது அதை தவிர்ப்பது எப்படி என்று ஆலோசனைகளும் விளக்கங்களும் கேட்டார். அவர் வெறுமனே பேசாமால நான் சொல்வதை ஆவலோடு குறிப்பெடுத்துக்கொண்டார். உரையாடல் கிட்டத்தட்ட 9 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது. மும்பை வந்து சேர்ந்ததும் அவர் அஹமதாபாத் சென்றார், நான் பெங்களூர் வந்தேன்.
இரண்டு மாதங்கள் சென்றது, எனக்கு குஜராத் ஹெல்த் மினிஸ்டரிடம் இருந்து ஒரு போன் வந்தது. Children MalNutrition ஐ பற்றி பேச அழைத்தார்கள், முடியுமா என்று கேட்டார். டிக்கெட் அனுப்புங்கள் வருகிறேன் என்றேன். டிக்கெட் வந்தது. முந்தைய நாள் அங்கு சென்ற எனக்கு முறையான வரவேற்பும், தங்குமிட வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு Conference, 9 மணிக்கு கார் வந்தது. 9:45 am அங்கு சென்று சேர்ந்த போது முதலமைச்சரும், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்னை வெளியே வந்து நின்று வரவேற்றார்கள். இது என்னை மேலும் ஆச்சர்ய படுத்தியது ஏனெனில் என் முந்தைய மோசமான அனுபவம் அப்படிப்பட்டது.
என் நினைவு கொஞ்சம் பின்னோக்கியது. சில வருடங்களுக்கு முன்பு நான் மனிபால் பல்கலைகழகத்திதின் துணை வேந்தராக இருந்த போது கர்நாடக முதல்வர் என்னை சந்திக்க வரச்சொல்லி இருந்தார். காலையில் முதல்வர் அலுவலகம் சென்றேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேர காத்திருப்பிற்கு பின் என்னை வரச்சொன்னார்கள். முதல்வர் அறைக்கு சென்றேன். பேச தொடங்குமுன் ஜப்பானில் இருந்து சில Delegate வந்திருந்தார்கள். முதல்வர் என்னை ஓரமாக காத்திருக்க சொல்லிவிட்டு அவர்களுடன் உரையாடல் சென்றது. மேலும் சில மணி நேர காத்திருப்பு. கடைசியில் என்னை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டார் முதல்வர். நீங்கள்தான் வரச்சொன்னீர்கள் என்று சொன்னேன். எதற்கு என்று தெரியாமல், இல்லையே என்றார். அந்த சந்திப்பு, கிட்டத்தட்ட 12 மணி நேர காத்திருப்பு பயனற்று தொடங்காமலே முடிந்துவிட்டது. அந்த அனுபவத்தால் இந்த வரவேற்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது.
கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றோம், சரியாக 10 மணி அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. அதற்கு பின்பு அமைச்சர்கள் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கான்ஃபரன்ஸ் திட்டமிட்ட நேரத்தில் சரியாக தொடங்கியது, அது மதியம் வரை தொடர்ந்தது. மதிய உணவு வேளை, முடிந்தபின் 15 நிமிடம் இடைவெளி. முடிந்ததும் கான்ஃபரன்ஸ் மீண்டும் தொடர்ந்தது. இப்போது மந்திரிகள், அதிகாரிகள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று குறுகிய Riverse Presentation தந்தார்கள். அதன் முடிவில் இருபுறமும் கேள்வி, பதில்களை பரிமாறிக்கொண்டோம்.
அடுத்து மோடி ஏக்‌ஷன் ப்ளான் பற்றி விவாதித்தார். முடிவில் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இறக்காமல் இருக்க கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு மதிய உணவு தருவது என்று அங்கேயே முடிவு செய்யப்பட்ட 8 நாட்களில் இது தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆணைகள் அங்கேயே பிறப்பிக்கப்பட்டது ஆச்சரியத்தோடு திரும்பினேன்.
அதன்பின் குஜராத்தில் குழந்தைகள் இறப்பு வெகுவாக குறைந்தது, எனக்கும் மனம் நிறைவடைந்து இருந்தது. நாம் உயர இது போன்றவர்கள் நாடாளும் நேரம் வரவேண்டும் என்று உரையை ஹெக்டே முடித்தார்.
இப்போது புரிகிறது மோடியைப்பற்றி அறிந்தவர்கள் இப்படி அவரை போற்றுவதும், நம்புவதும் ஒரு புறம் இருக்க தவறான எதிர்கட்சிகள், மீடியா போன்ற மோசமான வழிகாட்டிகளால் மறுபுறம் தவறான வழியிலேயே தொடரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அச்சத்தில் மோடியை எதிர்க்கிறார்கள். ஏனெனில் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான வாழ்க்கையால் அவர் உயர்ந்துவிட்டால், அவரைப்பற்றி மக்கள் புரிந்துகொண்டுவிட்டால் இந்த கேவலமான அரசியல்வாதிகளின் எதிர்காலமும், அதை சுற்றி பின்னப்பட்ட மீடியாவும், அதன் பின்னால் கைகோர்த்திருக்கும் எதிரி நாடுகளும் வீழ்ந்துவிடும் என்று நன்கு அறிவர். விளைவு தவறானவர்கள் தண்டிக்கப்பட்டு, மோசமான வழியில் சேர்த்த சொத்துக்களை இழக்க நேரிடலாம் என்ற பயம் கூட. அவர்கள் தீவிரமாக எதிர்ப்பதில் அவரின் மீதுள்ள அளவு கடந்த பயமே காரணம்.
அவர்கள் பயப்படலாம் அதில் சுயநலம் என்ற காரணம் புதைந்திருக்கிறது ஆனால் நாடு முன்னேற வேண்டும் என்று தவிக்கும் ஒவ்வொரு இந்தியனும் ஏன் பயப்பட வேண்டும்!
நல்லவரை நாடு அறிந்துகொள்ள, முன்னேற நீங்கள் படித்ததைப்பகிருங்கள்!
ஹெக்டேவின் பேச்சிலிருந்து.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...