ராமகிருஷ்ண மடத்தில் நடக்க இருந்த ஒரு விழாவிற்கு நிறைய லட்டுகளை தயாரித்து வைத்து இருந்தனர்.
எறும்புகளிடம் இருந்து அவற்றை எப்படி பாதுகப்பது என்று யோசித்தனர்.
கடைசியில் ரமாகிருஷ்ண பரமஹம்சரிடம் யோசனை கேட்டனர்.
லட்டு வைத்திருந்த பாத்திரத்தை சுற்றி சர்க்கரையால் வட்டம் போட்டார் அவர்.
இரவில் எறும்புகள், சர்க்கரையை மட்டும் சுவைத்து சென்று விட்டன. லட்டு பாத்திரத்தை நெருங்கவே இல்லை.
காலையில், அதை பார்த்து விட்டு, ராமகிருஷ்ணரிடம், லட்டு பாத்திரத்தை எறும்புகள் நெருங்காததை தெரிவித்தனர்.
அப்போது, ராமகிருஷண பரமஹம்சர், ' எறும்புகள் முன்னேறி சென்றிருந்தால், அவற்றுக்கு லட்டுகளே கிடைத்திருக்கும்.
இந்த எறும்புகளை போல தான், பல மனிதர்கள் உள்ளனர்.
*'சிறு வெற்றியே போதும் என, பெரும் வெற்றிகளை கோட்டை விட்டு விடுகின்றனர்...' என்றார்.*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
No comments:
Post a Comment